கவிஞர் பனித்துளி சங்கர் - தமிழ் காதல் கவிதைகள் - Panithuli shankar Tamil SMS Kadhal Kavithaigal - 2009



எரிமலையென
கொப்பளிக்கிறது
மனது ,
ஆனால்
தினம் தினம்
அதை தலையில்
கொட்டி கொட்டி முடிவைக்கிறது
உன் நினைவு !!!
                                 
                                               -கவிஞர் பனித்துளி சங்கர் .





உனக்காகவே எல்லாரையும் இழந்தேன்
நீ என்னை இழப்பாய் என்று தெரியாமல்!

      -கவிஞர் பனித்துளி சங்கர் .




உன்னுடன் நான் இருக்க விரும்புவது
இரண்டே பொழுதுதான்.
இப்பொழுதும் எப்பொழுதும்....

   -கவிஞர் பனித்துளி சங்கர் .





கசப்புகள் மட்டுமே அதிகம் நிறைந்த 
என் வாழ்வில்
உன் நினைவுகள் மட்டுமே 
இனிமையானவை !....

     -கவிஞர் பனித்துளி சங்கர் .






புரிதல் இல்லாமல் பிரிந்து சென்றவளே
பிரிய முடியவில்லையடி 
உன்னை புரிந்து கொண்டதால் !!!

     -கவிஞர் பனித்துளி சங்கர் .





அழுதாலும் தீராது என் சோகம்.... 
என்னை அழ வைக்கும்
உன் நினைவுகள் இருக்கும் வரையில்..



என்னை நீ எப்படி எல்லாம் காயபடுத்துகிறாய்
என்று உனக்கு தெரியாது...!
என் காயங்கள் உனக்கு
வலிக்க கூடாது என்று
உன் புன்னகையில் ஒளிந்து நிற்கிறேன்...!



உன் இதயத்தை கேட்டு பார் ஒவவொரு துடிப்புக்கும்
ஒரு அர்த்தம் சொல்லும் ஆனால்
என் இதயத்தை கேட்டு பார் துடிப்பின் அர்த்தமே
நீ தான் என்று சொல்லும்....



வலி தந்தவர்களை
உயிராய் நினைப்பது
தாய்மையும் காதலுமே...




தனிமையில் நான் உன்னை நினைக்க
விரும்பவில்லை.... !
உன்னை நினைப்பதற்காகவே தனிமையை
நான் விரும்புகிறேன் ...




துடிக்க மட்டுமே தெரிந்த என்
இதயத்திற்கு தவிக்கவும்
கற்றுக் கொடுத்தது
உன் அன்பு...!!!




வாழ்க்கையில் சிலரை மறக்க முடியாது.
சிலரை பிரிய முடியாது.
மறக்காமல் நீயிரு.
பிரியாமல் நானிருக்கிறேன்.


வலி தாங்காமல் தினம் தினம்
மவுனமாக வதைக்கப் படுகிறது
என் இதயம்.வலி தாங்காமல்
 தினம் தினம்மவுனமாக வதைக்கப் படுகிறது
என் இதயம்.




வார்த்தை வர மறுக்கும் 
மௌனங்களில் என் கண்ணீர்ப் பயணம்
வலிகளின் துணையோடு....!!!




என்னில் சந்தேகம் என்றால் சொல்
அதை உன்னிடம் தீர்த்து வைப்பேன்
என் அன்பில் சந்தேகம் என்றாலும் சொல்
என்னில் நானே தீ வைப்பேன் ..





அழுவதை விட கடினமானது
சிரிப்பது போல் நடிப்பது
இறப்பதை விட கடினமானது
யாரும் இன்றி வாழ்வது...




அவளைவிட அழகான ஒரு ஓவியத்தை
அவளுக்கு பரிசளிக்கும் முயற்சியில்
இன்று வரை தோற்றுக்கொண்டிருக்கிறேன் நான்...




மறதியை விட சிறந்த
மருந்தை எந்த மருத்துவமும்
தந்து விடப் போவதில்லை...
உன் நினைவுகளிடம்
பொய்த்துப் போகிறது அதுவும்...






உலகத்திற்கே ஒளி தந்தாலும்
இரவில் மறையும் சூரியன்
அல்ல என் கதால்
நீ வேண்டாம் என்று வேறுத்தாலும்
உன்னை தேடிவரும் சுவாசக் காற்று
என் காதல் என்றும் உன்னையே சுற்றும்








ஒருவரை முற்றாக அறிந்துகொண்டு
அவர்களைப் புரிந்துகொள்வதற்கிடையில்
கடந்து விடுகின்றனர் அவர்கள்
இன்னுமொரு உறவை தேடிக்கொண்டு...






உலகின் மொத்தக் கவனமும்
நம்மீது இருக்கிறது என நினைப்பது
காதலில் மட்டுமல்ல காத்திருப்பிலும் சாத்தியம்..




எத்தனைமுறை பார்த்தாலும்
சலிக்காத உன் முகம்...
எத்தனைமுறை சண்டையிட்டாலும்
வெறுக்காத உன் நேசம்...
அழவைத்துக்கொண்டே என்னைத் தேற்றிக்கொள்ளும்
உன் இரக்கங்கள்
இவை அத்தனையும் என்னோடு நிரந்தரமானால்
இந்த உலகத்தில் என்னைவிட அதிஷ்டசாலி
வேறு யாருமே இருக்கமுடியாது...






நீ விரும்பும் இதயம்
உன்னிடம் என்னென்ன
எதிர் பார்க்கும் என்று
சொல்ல முடியாது
உன்னை நேசிக்கும்
இதயம் அன்பை
மட்டுமே எதிர் பார்க்கும்...




நீ ரசிக்கும் அளவிற்கு
நான் அழகனவனாய் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் உன்னை ரசிக்கும் அளவிற்கு
நான்அன்பானவன்...






நாளைகளின்மேல் நம்பிக்கையை விதைத்துவிட்டு
இன்றைய வலிகளையெல்லாம் மறக்க முயற்சித்தபடி
முட்டிமோதிக் கொண்டிருக்கிறேன்..
உன் நினைவுகளோ






உலகில் ரசிக்க
ஆயிரம் இருந்தும்
அனைத்தையும் மறந்து
நான் ரசித்தது
உன்னோடு பேசிய
இனிமையான நாட்களை
மட்டும் தான்








நம் காதலை யாருக்கும் தெரியாமல்
பார்த்துக்கொள் என்றாய்
நானும் பார்த்துக்கொண்டேன்
கடைசியில் யாருக்கும்
தெரியாமல் போய்விட்டது.








உன்னை விட்டு நான்
விலகியே இருக்கிறேன்.
அருகில் இருந்தால்
என் இதயம் துடிக்கும் ஓசை கூட
உன் உறக்கத்தைக்
கலைக்க கூடாது என்பதற்காய்...






பிடிகாத ஒன்றை நினைக்க முடியாது "
அதுபோல
"பிடித்த உன்னை மறக்க முடியாது "




அம்மாவின் அன்பு எப்படி உண்மையோ?
அதுபோல் உனக்காக ஒருவன்
அழுகின்றான் என்றால்
அவனின் அன்பும் தூய்மையானது...










ஒரு நொடி
மரணத்தை விட .
உன்னால்
ஒவ்வொரு நொடியும்
சாகடிக்கப்படுவதையே
மிகவும் விரும்புகிறேன் ....!!!










பார்க்கும் முகங்களெல்லாம்
நீயாகத் தெரித்தால்
எப்படி மறப்பேன் உன்னை !




அனைவரும் அழகானவர்கள் தான்
பார்க்கும் பார்வையில் அனைத்தும் உள்ளது !






சொல்ல வேண்டியவை
எவ்வளவு இருந்தாலும்
நேரில் பார்க்கும் போது சொல்ல மறப்பதும்,
சொல்ல முடியாமலும், கடந்த பின் தவிப்பதும்தான்
சில நேரங்களில்
யதார்த்தமாக நிகழ்கிறது .










ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு !

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு !..









ஆணின் சிரிப்பினை விட,
பெண்ணின் சிறு புன்னகை அழகானது...

பெண்ணின் அழுகையை விட,
ஆணின் ஒரு துளி கண்ணீர் வலி நிறைந்தது...!






ஏழையின் காதலும்
தாயின் தாய்பாலும் ஒன்றுதான்
இரண்டுமே விலைக்கு அடிமையில்லை !








கருப்பு நிறத்தில்
ஒரு வானாவில்
அது உன் புருவம்..!






காதல் பூ
ஒரு வன்னத்து பூச்சி
உன்னை பார்த்து என்னிடம்
கேட்கிறது ஏன் இந்த பூ
நகற்ந்து கோண்டே இருக்கிண்றது
என்று?








வண்ணத்து பூச்சியின்
வாழ்நாள் கூட
வேண்டாம் ...!
என்னிடத்து
நீ உன் காதலை
சொன்ன பிறகு ....!








என் வாழ்வில் நடந்த மிகப் பெரிய
அறிவியல் விந்தை !?
- காதல்








அவள் என்னை காதலிக்கவில்லை
அதற்க்கு சாட்சியாக இருக்கின்றன
குப்பைத் தொட்டியில் என்
காதல் கடிதங்கள்.








எனக்கான காதல் என் தலையணையில்
ஆரம்பித்து போர்வைக்குள்
முடிந்து விடுகிறது கண்ணீராகவும்,
கனவுகளாகவும்.










தாயின் கருவறையோ
பத்து மாசம்
உனது "இதயம்"என்ற
கருவறையோ
ஆயுள் முழுவதும்.



 -கவிஞர் பனித்துளி சங்கர் .





0 மறுமொழிகள் to கவிஞர் பனித்துளி சங்கர் - தமிழ் காதல் கவிதைகள் - Panithuli shankar Tamil SMS Kadhal Kavithaigal - 2009 :