வாழ்க்கை

வயது முதிரும் முன்பு
பள்ளிக் கால வாழ்க்கையில்…..
துள்ளி விளையாட
நினைத்தக் காலங்கள்
ஆனால்………….
ஆயிரம் இயந்திரங்கள்
ஆனாலும் அவையின்றி
கையில் கலப்பை பிடித்து;
எருதுகள் முச்சிரைக்க
வேர்த்து வேர்த்து
கலைத்துப் போன உடம்பு;
வேர்ப்பதை நிறுத்தியபோதும்
உழுது கலைக்காமல்
உள்ளத்தில் உறுதியோடு மேடு
பள்ளங்களை சரிசெய்து
பயிர் செய்ய
பக்குவப்படுத்தி பரவசமடையும்
உழவனாயிருந்தபோது;
உச்சி வெயில்
உடலை வருத்தியபோதும்
உளந்தளராமல்
ஓடயைனில் மடைகட்டி
சூழ் கொண்ட பயிருக்கு
தண்ணீர் பாய்ச்சும்
விவசாயியாயிருந்தபோது;
வெயிலின் வெப்பமே
வாழ்க்கையென
தலையில் முன்டாசும்
கையில் கரைத்தக்
கூழோடும் எறுமைக்கூட்டத்தினிடையே
பாட்டிசைத்துப் பரவசப்படும்
மேய்ப்பவனாயிருந்தப் போது
புரியவில்லை வாழ்க்கை!
பள்ளியின் பாடத்திலும்
கவனம் பதித்து
பேச்சு கட்டுரைப்
போட்டிகளிலும் பரிசுப்
பெற்று பள்ளி வாழ்க்கை
முடித்தப் போது
இடம்கிடைத்தும்
இயலவில்லை கல்லூரிச் செல்ல;
கணிப்பொறியின் கனவை
கலைத்திடவும் மனமில்லை…
தொலைத் தூரக் கல்வி முறையில்
இளநிலையும் முதுநிலையும்…
கனித்தமிழையும் மறக்காமல்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
கல்கியோடும் கண்ணதாசனோடும்
வால்மீகியோடும்
வாழ்க்கையின் பயணம்!!
ஐந்திலக்கச் சம்பளம் கிடைக்க
பெற்றோரிடம் சொல்லிகொண்டு
சென்னை வந்தடைந்தப் போது
கண்ட காட்சி
கண்ணை விட்டகலவில்லை ஏனோ!
சாக்கடை யாற்றங்கரையில்
சாரை சாரையாய் குடில்கள்;
அன்றைய தினம்
அடிவயிறு நிறைந்தால் போதும்
அதுவே அமுதை
அடைந்த திருப்தி
அவர்களுக்கு!!!
அலைக் கடலே வாழ்க்கையென
ஓலைக் குடில்களில்
வாழ்க்கையை ஒட்டி
கண்ணீரோடு தண்ணீரில்
பயணம் செய்யும் மீனவர் கூட்டம்!!
ஆதவன் உதிக்கும் முன்பே
குப்பை ஊர்தியை முந்திக் கொண்டு
தூக்கியெறியப்பட்ட குப்பைகளை
கிளறி வாழ்க்கையைத் தேடும்
இளந்தளிர்கள்!!
சுரங்கப் பாதைகளையே
சொர்க்கமாய் எண்ணி
நைந்துப் போன உடையும்
எண்ணெய் காணா முடியும்
நீர் காணா உடையொடொட்டிய
உடலுமாய்
பாசப் பிள்ளைகளால்
ஒதுக்கப்பட்டு
ஒடுங்கிப் போன
உள்ளத்தோடு உருகுலைந்து
வாழும் முதியோர்!!
வாழ்க்கையின் எதார்த்தங்கள்
ஆழமாய் நெஞ்சுக்குள்
உள்ளத்தில் பழுத்தக் காய்ச்சிய
கம்பி புகுந்ததுப் போல்!
புதிய உலகமொன்று
படைத்திடல் வேண்டும்!
அங்கு அனைவருக்கும்
அனைத்தும் கிடைத்திடல் வேண்டும்!
நினைத்தேன்; ஆனால்
எதார்த்தம்….
என்னைப் பார்த்து
எக்காளமிடுகின்றது!!!
நீ வைத்திருக்கும் பணத்திற்கு
இன்னும் ஐந்துநிமிடமே
உன்னால் இணையத்தளத்தில்
உளவ முடியும்
எழுந்திரு எழுந்திரு!!
ஓ…….
மாதக் கடைசியென்பதை
மறந்து போய்………
வாழ்க்கைப் புரிந்தது!!!

2 மறுமொழிகள் to வாழ்க்கை :