அவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் !!!

என் அன்புத் தோழி ஜெனிக்கு எனது இந்த கிறுக்கல்கள் சமர்ப்பணம் .!!!


பிரிவு என்ற வார்த்தையின் அர்த்தம்
 உணர்ந்ததில்லை இன்றுவரை .!
அவளின் குரலையும் கேட்டதில்லை
இன்றுவரை  .!
ஆனால் சில நேரங்களில் அவளின் முகவரி அற்ற
எழுத்துக்கள் மட்டுமே அவ்வப்பொழுது என்னை தீண்டும்பொழுதும்  எல்லாம் ஏனோ என் குட்டி இதயம் சிறகுகள் இன்றியும் மகிழ்ச்சியில் பறந்துகொண்டுதான் இருந்தது .அந்த நாள்வரை .......
ஆனால்
இன்று மட்டும் ஏதோ அவளின் குரல் கேட்க ஆசை .!
இருந்தும் என்னை கேட்காமலே அவளின்
தொலைபேசியின் எண்களை எப்படியோ கேட்டு விட்டது.,
எந்தன் முரட்டு ஆசைகள் !
அவளோ முதலில் பயம் என்றாள் ., !
ஆனால், பயப்படாமலே வந்தடைந்தன.,
அவளின் தொலைபேசியின் எண்கள் தொலைவிலிருந்து எண்ணை .!
இப்பொழுதும்கூட நான் அவளை பிரிந்து
பல ஆயிரம் மயில்க்கல் தொலைவில் தான் இருக்கிறேன் .!
அவளின் தொலைந்து தொலைந்து விடாதா
 நினைவுகளுடன் மட்டும் .!
அப்பொழுதெல்லாம் இந்த தூரத்தின் இடைவெளி
என்னையும் ,என் அவளையும் துரத்தியதாக
நினைவில் இல்லை இன்றுவரை .!
ஆனால் ,
இன்று நான்கு நாட்கள் என்னை விட்டு
பிரிந்து ஊருக்கு செல்கிறேன்.,
என்று அவள் இதழ்களில் இருந்து இந்த
வார்த்தைகள் உதிற்வதற்கு முன்னதாகவே ,
என் இதழ்களில் மலர்ந்தது ஏன் ? என்ற கேள்வி .இருந்தும் .
என் இதயத்திற்கு வலிக்காமல் தான் பதில் தந்தாள் ,
அம்மா , தம்பியை பார்க்க என்று
வார்த்தைகள் தீர்ந்ததுபோல் சுருக்கமாக .!
அவளுடன் நான் கணினியில்
எழுத்துக்களால் பேசும்பொழுது கூட,
கலவரம் அற்றுதான் சாந்தமாக இருந்தது
எந்தன் குட்டி இதயம் .!
ஆனால்,
அவளுடன் பேசாத இந்த நாட்களில் அதே குட்டி இதயத்தில்,
கலவரம் மட்டும்தான் சாதனையாகக் காட்சி அளிக்கிறது .!
இரவுகளில் கூட உறங்க மறக்கிறேன் . !
பகல்களில் கூட விழிக்க மறுக்கிறேன் . !
இப்படி வினாவும் அற்று , விடைகளும் அற்ற ,
கேள்விகள் மட்டும்தான் அணிவகுத்து நிற்கின்றன.,
நீ மீண்டும் செல்லமாக அழைக்க போகும் Hi Da செல்லம் என்ற ,
விலை மதிப்பில்லா அந்த சில வார்த்தைகளை நோக்கி .!
எழுதுகோல் இன்றி உதடுகளாலே உன்னை பிரிந்த,
இந்த நான்கு நாட்களில் கிறுக்கிய வார்த்தைகளுக்கும் கூட ,
கண்டிப்பாக வயதாகி இருக்க கூடும் .!
இருந்தும் நான் ஒரு தாயை பிரிந்த,
சிறு குழந்தாயாகத்தான் உந்தன் வருகை நோக்கி,
கறைந்து கொண்டு இருக்கிறேன் .!
நான் பணிபுரியும் இடம் எனக்கு,
எப்பொழுதும் கலவரமாகத் தோன்றும் .
ஆனால்,
உன்னை பிரிந்த இந்த நான்கு நாட்கள் மட்டும்,
தியான மடமாக மாறிப்போன விசித்திறம்தான்,
இன்னும் பதில்கள் அற்ற மர்மமாக என் மனத்தில்.!
உந்தன் பிரிவு என்னை தீண்டாத இந்த நொடிகள் வரை,
உந்தன் குரல் கேட்டு ஆசைகள் ஆற்றுத்தான்,
ஊமையாகவும் , ஊனமாகவும் இருந்தன .,
என் தொலைபேசியும் , எந்தன் விரல்களும் . !
ஆனால்,
உந்தன் பிரிவு என்ற புயல் என்னை தீண்டியதும் .,
நான் பாதுகாத்து வந்த என் ஊமை தொலைபேசியும் ,
எந்தன் ஊனமான விரல்களும் , மின்னல்போல் அல்லவா
உந்தன் தொலைபேசியை தொடர்பு கொள்ள
எண்களை பதிவு செய்தது .!
எந்தன் அழைப்பில் உந்தன் தொலைபேசியில்
வெளிப்பட்ட ஒவ்வொரு மணி ஓசையும் ,
உனக்கு முன்னால் முந்திக்கொண்டு எடு , எடு என்று
எனக்காக பலமுறை கெஞ்சியதாக அல்லவா,
என்னிடம் வந்து குறை கூறின !
திடீர் என்று ஒரே அமைதி .!
ஏன் நான் சுவாசிப்பதைக்கூட சில,
வினாடிகள் சிறை பிடித்து அல்லவா வைத்திருந்தேன் .,காரணம்
 முதல் முறையாக என்னவள் இதழ்கள்,
உதிர்க்க போகும் அந்த வார்த்தையை ,
என் செவிகளைத் தவிர வேறு எதுவும்,
தீண்டிவிடக்கூடாது என்ற ஒரு பொறாமைதான் .!
பலமணி நேரம் சுவாசாமின்றி ஒரு குடுவைக்குள்
அடைப்பட்டவன் விடுவிக்கப்பட்டால் எப்படியோ ?
அப்படித்தான் உணர்ந்தேன்., அவள் இதழ்கள் உதிர்த்த
முதல் வார்த்தை என்னை தீண்டிய மறு நொடி .!
எனக்கு உயிர் கொடுத்த அவளின்
 அந்த முதல் வார்த்தை என்ன ? என்றால் .!
நானும் என்ன என்றேன்.?
 மீண்டும் என்ன என்றால் .?
நானும் என்ன என்றேன் .!
இப்படி வினாக்ளே அற்ற கேள்விகள் அவள் இதழ்களிலும் .,
விடைகளே அற்ற வினாக்கள் என் இதழ்களிலும்
சில வினாடிகள் எங்களை ஆக்கிரமிக்கத்தான் செய்தன .!
மீண்டும் திடீர் என்று ஒரே அமைதி .!
திடீர் என்று என்னை சற்று அதிர வைத்தது .
நான் எதிர் பாராத தருணத்தில்
அவள் என் மீது வீசிய மற்றொரு வினா .!
நீ எதற்காக என்னிடம் I Love You என்று சொன்னாய் ?
அதற்கு முன் அவளிடம் பக்கம் பக்கமாக
 பேசிய என் உதடுகள் , அப்பொழுது மட்டும் ஏனோ
வார்த்தைகளே தீர்ந்தது போல்
பதிலை தேட துவங்கியது .!
மீண்டும் திடீர் என்று ஒரே அமைதி .!
என்னை காயப்படுத்த அவள் ஏனோ விரும்பவில்லை .!
எனவேதான் முதல் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்காமலயெ
மெதுவாக மறு வினாவை என் மீது வீசினால் .,
சாப்பிட்டியாடா செல்லம் ? என்று .!
உண்மை இல்லை என்று தெறிந்தும் .,
பொய் சொன்னேன் அவளிடம் .!
ஏன் ? என்று அவள் இதழ்களில் இருந்து
உதிறப்போகும் அந்த வார்த்தைக்காகவே .!
அவளின் மறு வினா ? நான் நினைத்தது போலவே
எனக்கு மகிழ்ச்சியின் முகவரியை தந்துவிட்துத்தான் சென்றது .!
தெரியாது என்றாலும், தெரிந்ததுபோல்
அவளிடம் ஊறுகாய் உன்னாதே என்றும் .!
தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் அவளின்
செல்ல நாய்க் குட்டிக்கு எந்தன் பெயரை வைக்க சொல்லியும் .!
பார்க்காமலே பார்த்தது போல் அவள் வீட்டு
பூச்செடிகளின் செல்லப்பெயர்களை விசாரித்து நானும் .!
புரியாமலே புரிந்தது போல் ரோஜா செடிக்கு Angel
என்று பெயர் வைத்ததாக அவளும் .!
பிடிக்காமலே பிடித்தது போல் குச்சி மிட்டாயும் ,
குருவி ரொட்டியும் வாங்கி வரச் சொல்லி நானும் .!
பிடித்தது போல் பிடிக்காமலே வாங்கி வருவதாக அவளும் .!
இப்படித்தான் அவள் இதழ்கள் உதிர்த்த வினாக்களும் .!
என் இதழ்கள் உதிர்த்த விடைகளும் .!
மகிழ்ச்சியில் மெய்மறந்து தொலைவிலிருந்தே
முத்தமிட்டுக் கொண்டிருந்தன .!
எந்தன் தொலைபேசியின் இணைப்பு
நாங்கள் எதிர்பாராமல் துண்டிக்கப்பட்ட அந்த நொடி வரை !
இதுவரை மட்டும்தான் அவளுக்கு தெறிந்திருக்கக்கூடும் .!
இது போன்ற லட்சக் கணக்கான உளரல்கள்
உன் பிரிவால் என் குட்டி இதயத்தில் ,
எண்ணிக்கைகள் அற்று இன்னும்
மலராமல் மொட்டுகளாகத்தான்
உன் வருகைக்காக ஏக்கங்கலையும் ,
எதிர்பார்ப்புக்களையும் மட்டும்
துணையாகக் கொண்டு வழியெங்கும் காத்திருக்கின்றன.!
என்பது உனக்கு எப்படி தெரியும் ?
                                                              -  மொட்டுக்கள் மீண்டும் மலரும் ................
14 மறுமொழிகள் to அவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் !!! :