ஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி !!!


ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.தற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளது.


லக்ஸ் சோப்பு விளம்பரத்துக்காக அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். கிளுகிளுப்பூட்டும் இந்த விளம்பரம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.


இந்த சோப்பு விளம்பர படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் ஜோடிக்கு ரூ.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.


இந்தியாவில் விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்காக இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


மும்பை படஉலகில் பொன் முட்டையிடும் தங்கஜோடி என்று ஐஸ்வர்யாராயும், அபஷேக்பச்சனும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நடித்துள்ள லக்ஸ் விளம்பர படம் அடுத்தவாரம் முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது

2 மறுமொழிகள் to ஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி !!! :