ஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்

தென் அமெரிக்காவில் பிறந்த 34 வயது ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரான். இவர் சான்பிரான்சிஸ்கோவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்கொடைக்காக நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஏலத்தொகையை அதிகரிப்பதற்காக அவரிடம் இருந்து 7 வினாடி முத்தம் ஒன்றை யும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி சலுகையை வெளியிட்டார்.இதையடுத்து ஒரு நபர் 130 ஆயிரம் டாலருக்கு ஏலம் கேட்டார். அப்போது திடீரென அங்கிருந்த பெண் ஒருவர் 140 ஆயிரம் டாலர் கேட்டு ஏலம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


இந்திய மதிப்பு படி இந்த தொகை ரூ.64 லட்சமாகும். இதையடுத்து தனது காதலன் நடிகர் ஸ்டூவர்ட் டவுன்சென்ட்(36) இங்கு இல்லை என ஜோக் அடித்த படி தெரான் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்தார்.

http://wwwrasigancom.blogspothttp://wwwrasigancom.blogspot.com/
.com/

3 மறுமொழிகள் to ஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம் :