மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி !!!


வால்பாறை : வால்பாறை அருகே மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. வால்பாறை தாலுகாவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் நான்கு, அரசு உயர்நிலைப்பள்ளிகள் நான்கு உட்பட மொத்தம் 94 பள்ளிகள் உள்ளன. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் எட்டு செட்டில்மென்ட்களில் துவக்கப்பள்ளிகள் இரண்டு ஆண்டாக இயங்கி வருகின்றன. 2006ம் ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரியும் செயல்படுகிறது.வால்பாறையில் உள்ள பெரும்பாலான அரசு துவக்கப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு பூட்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது சின்னக்கல்லார். இங்கு 50 ஆண்டுகளாக ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி செயல்படுகிறது. முதல் வகுப்பில் இரண்டு மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் இரண்டு மாணவர்களும் படிக்கின்றனர். இரண்டு, மூன்று, நான்காம் வகுப்புகளில் மாணவர்கள் எவரும் இல்லை. மொத்தமுள்ள நான்கு பேரில் ஒரு மாணவர் பல நாட்களாக பள்ளிக்கு வருவதே இல்லை. மூன்று மாணவர்களுக்காக மட்டும் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இவர், விடுப்பில் சென்றாலோ அல்லது எஸ்.எஸ்.ஏ., பயிற்சிக்கு சென்றாலோ பள்ளிக்கு விடுமுறை தான். மூன்று மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர், சத்துணவு, வகுப்பறைகள், எஸ்.எஸ்.ஏ., "டிவி' உட்பட பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது


மறக்காமல் உங்களின் கருத்துகளை  (Post Comments  )இங்கு பதிவு செய்யவும் !

4 மறுமொழிகள் to மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி !!! :