ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ் படம் ஆயிரத்தில் ஒருவன் !!!

ஆயிரத்தில் ஒருவன் கடந்த வருடத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வெளிவந்த அனைத்து படங்களும் ஏமாற்றத்தை தந்திருந்தாலும்., ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று சொல்லலாம் இப்பொழுது வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் .
எங்களாலும் உங்களைபோல் கதை சொல்லமுடியும் என்று ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் வகையில் கதையின் களத்தையும், காலத்தையும் வேறுபடுத்தி அமைத்து இருக்கிறார் இயக்குநர் செல்வ ராகவன் என்று சொல்லலாம் .


சோழர்கள் யார் ? பாண்டியர்கள் யார் ? என்று தெரியாத இன்றைய தலைமுறைக்கு கடந்த காலத்தை மீண்டும் நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து கண்முன் திரைப்படமாக கட்டி இருக்கிறார் இயக்குநர் செல்வ ராகவன். மீண்டும் கடந்த காலத்தை மீட்டு எடுத்துவரப்போவதுபோல் படம் நிகழ்காலத்தின் ஒரு குழுவுடன் கடந்த காலத்திற்கு பயணம் தொடங்குகிறது .


பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் ஏற்படும் போரில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டியர்களின் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு சிலையை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிடுகிறது சோழர் படை . அந்த சிலைக்காக சோழர்களை தேடி காட்டுக்குள் செல்கிறது நிகழ்காலத்திலிருந்து ஒரு குழு இப்படி படத்தின் கதை தொடங்குகிறது .இதில் அந்த சோழர்கள் ஒரு பயங்கரமான கட்டுப்பகுதியில் யாராலும் எளிதில் நெருங்க முடியாத அளவிற்கு ஏழு பயங்கரங்களை வழி நெடுகிலும் தாயார் நிலையில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .


இதற்கிடையில் மொத்த குழுவும் ரீமாவின் தலைமயில் அந்த பயங்கரமான ஆபத்துக்களை எதிர்பாராமல் காட்டுக்குள் செல்கின்றன . அந்த குழுவில் ஒருவராகத்தான் நமது கதாநாயகன் கார்த்திக் அதே பருத்தி வீரன் நக்கலான பேச்சு , திருட்டு பார்வை முரட்டு மொக்கை என படத்தின் அறிமுக காட்சியிலயே கையில் பீர் பட்டலுடன் வந்து பட்டையை கிளப்பி விடுகிறார். குத்துனா இப்படி இருக்கணும் என்று இருந்த இடத்தில் நாமே நமக்குள் சொல்லிக்கொள்வோம் அந்த அளவிற்கு படத்தின் முதல் பாதி பயங்கர எதிர்பார்ப்புகளுடன் அந்த அடர்ந்த கட்டுப் பகுதிக்குள் நமது உள்ளங்களை நமது அனுமதியின்றி இழுத்து செல்கிறது .


இயக்குநர் செல்வ ராகவன் மாறுபட்ட இடங்களில் காட்சிகளை அமைத்திருக்கும் புதிய முறை மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என்று சொல்லலாம். ஹாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அதிக ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு காட்சிகளும் திகிலுடன் விறுவிறுப்பாக காட்டுப்பகுதியில் கபடி விளையாடத் தொடங்கிறது .


 இதுவரை தூரத்தில் இருந்த நீண்ட பாலைவனங்கள்., தமிழ் திரை உலகம் இதுவரை பார்த்திராத மிரட்டும் கட்டுப்பகுதிகள்., பல நூறு வருடங்களுக்கு முந்தைய நினைவு சின்னங்கள்., பழங்காலத்து போர்முறை என ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக செதுக்கி ஒரு புதுமையுடன் ரசிகர்களுக்கு கண்முன் தந்திருக்கிறார் இயக்குநர் செல்வ ராகவன் எனலாம் .

காட்டுப் பகுதியில் காட்டுவாசிகளுடன் ஏற்படும் சண்டை காட்சிகள் மற்றும் மிரட்டும் முரட்டுப் பார்வை . எதிரிகளின் ரத்தத்தை உறைய செய்யும் கத்தும் ஆவேச சத்தம் . ஒரே மூச்சில் எதிரிகளை பின்னுக்குததள்ளும் ஒரு கொலைவெறி கொந்தளிப்பு .படத்தில் சோழர்களின் அரசனாக மரணம் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் முதிர்ந்த வில்லனாக தோற்றம் மாறாமல் இருக்கும் பார்த்திபனுடன் நடனம் .


ராத்திரியான கட்டிப்பிடிச்சுகிராள்க பகலான விட்டுட்டு போகிறாள்க என்று ஒன்றும் அறியாத குழந்தைபோல் ஒரு நக்கல் பேச்சில் நகைச்சுவை என இப்படி படத்தில் முதல் பகுதியில் தனது நடிப்பிற்கு ஒரு சிம்மாசனம் அமைத்து ஆட்சிசெய்கிறார் கதாநாயகன் கார்த்திக்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அமைத்துள்ள இதுபோன்ற காட்சிகளில் ரீமைதவிர வேறு யாரும் இப்படி நடிக்க இயலாது என்று சொல்லும்வகையில் ரீமாகதாநாயகன் கார்த்திக்கை மிரட்டும் பாவனை. சங்ககால தமிழை சற்றும் பிறழாமால் பேசும் காட்சிகள், கோபத்தில்நக்கலாக ஆங்கிலத்தில்கேட்டவார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் உடல் பாவனைகள் . கோபத்தில் ஆவேசப் பார்வை வீசும் அந்த காட்சிகள் .


காட்டு வாசிகளுக்கு இணையாக சண்டைபோடும் துணிச்சல் .. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் இவருக்கு இணை வேறு யாரும் இல்லைஎன்ற நமக்குள் நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் ஒரு திறமையான நடிப்பு ரீமா இனி டாப் எனலாம் .

படத்தின் கதாநாயகி யார் என்று காணிக்கமுடியாத வகையில் ஆண்ட்ரியா தனக்கு கொடுத்த காட்சிகளில் தனது திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்


இப்படி படத்தின் முதல் பகுதி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்புகளுடன் போகும் வழியில் சோழ அரசன் பார்த்திபன் ரீமா ஆகிய இருவருக்கும் ஏமாற்றத்தின் விளிம்பில் ஏற்படும் சண்டை காட்சிகள் , படத்தின் இரண்டாம் பாதியில் சோழர்கள் உச்சரிக்கும் தமிழை கேக்கும்பொழுது . இரண்டாம் பாதியை வேற்றுமொழியில் எடுத்துவிட்டார்களோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது .


 பலநூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தமிழை எப்படியோ தேடிப் பிடித்து எழுதி இருக்கிறார் கவிஞர் வைரமுத்து என்றபோதிலும்., இப்படி அளவுக்கு அதிகமாக அனைவரையும் குழப்பும் வகையில் வார்த்தைகளை அமைத்தது சோழர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே பல ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. சோழர்களுடன் ரீமாவின் நிகழ்காலக் குழுவை மோத விடும் சண்டை காட்சி சற்று முகம் சுழிக்க வைக்கிறது. இப்படி படத்தின் இரண்டாம் பகுதி சற்று சரிவை தரும் வகையில் தேகத்தில் வலுவிழந்த குதிரைபோல் வேகத்தில் பின்வாங்குகிறது நமது எதிர்பார்ப்புகள் என்றபோதிலும்., இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அவர்களின் வித்தை மற்றும் கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகள் மற்றும் பாடகர்கள் விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீஇவர்களின் குரல்களில் ஒலித்த {{ தாய் தின்ற மண்ணே }} பாடல் .
ஒளிப்பதிவாளரின் மின்னல் வேகம் , இயக்குநர் செல்வ ராகவனின் வித்தியாச கதை கண்ணோட்டம் இப்படி என்று அனைவரின் திறமைகளும் ,உழைப்பும் ஒன்று சேர்ந்து இதுபோன்ற ஒரு சில இடங்களில் முகம் காட்டும் சிறு குறைகளை நாம் அனைவரையும் மறக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது எனலாம் .


மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் விரைவில் அனைவராலும் பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம் .


இதுவரை ஒரு கிணற்று தவளையென ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றிவந்த இந்த தமிழ் திரை உலகம் இயக்குநர் செல்வ ராகவனின் இந்த படத்தின் மூலம் மொத்த தமிழ் திரை உலகமும் ஒரே மூச்சில் பிரமாண்டங்கள் மற்றும் வியப்புகள் என்று தனக்கேனே ஒரு இடத்தை கொண்டு வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு புது சிம்மாசனம் அமைத்துள்ளது என்று சொல்லலாம் . அந்த அளவிற்கு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் , கதை அமைந்துள்ள கலம் , நடிப்பு பின்னணி இசை என ஒவ்வொன்றும் ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது . முதல் முறையா ரசிகர்களின் எதிர்பார்ப்புககளை பூர்த்தி செய்தது மட்டும் அல்லாம் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகப்டித்தியிருக்கும் தமிழ் திரை உலகின் முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் என்று தயங்காமல் கூறலாம் .


 மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரை உலகின் பிரமாண்டங்களின் முதல்வன்.
மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ்ல குத்தவும் ..........

8 மறுமொழிகள் to ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ் படம் ஆயிரத்தில் ஒருவன் !!! :