சூரியன் யாருக்கு சொந்தம் !!!

பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான்  சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி அதுதான் தெரிந்த விசயம் என்றாலும் மீண்டும் எழுதுவோம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடும் அல்லவா . இனி விசயத்திற்கு வருகிறேன் .
ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் . நான் ஒருவேலையாக  அந்த சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தேன் . திடீர் என்று அவர்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது . எனக்கு ஒரே குழப்பம் இப்பொழுதுதான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்கள் . திடீர் என்று என்னாகி இருக்கும் என்று. சரி அவர்களிடமே கேட்டுவிடலாம் என்று இருவரையும் சமாதானப்படுத்தி கேட்டேன் என்ன விசயம் எதற்காக சண்டை அடித்துகொள்கிறீர்கள் என்று . அப்பறம்தான் விசயம் தெரிந்தது அவர்களின் சண்டைக்கு காரணம் சூரியன் யாருக்கு சொந்தமென்பதில் என்று . என்னடா சூரியனுக்கும் இவர்கள் சண்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைப்பதுபோலவே நானும் அவர்களிடமே கேட்டேன் என்னவென்று . அதற்கு அதில் ஒருவன் சொன்னான் சூரியன் எங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் வருகிறது முதலில் நாங்கள்தான் பார்க்கிறோம் . அதனால் எங்களுக்குத்தான் முதல் சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது .அவசரப்பட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ என்று .சரி மாட்டியாது மாட்டிக்கொண்டோம் . அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று அதையும் கேட்டுவிடுவோம் என்று தோன்றியது . அவனிடம் கேட்டேன் அதர்க்கு அந்த அறிவாளி சூரியன் வருவதும் மறைவதும்தான் உங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் அது மறைந்ததற்கு பின்பு தினமும் இரவு எங்க ஊரில்தான் உறங்குகிறது .அதனால் எங்களுக்குத்தான் அதிக சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு தோன்றிய சிறிய சந்தேகம் தெளிவாகிப்போனது .அப்பறம் அவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னிடம் கேட்டார்கள் நீங்களே சொல்லுங்க ஸார் எனக்குத்தானே சொந்தம் என்று ??????????? . அப்பறம் என்னங்க எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிவிட்டு. வாட மாப்ள அடுத்த தெருவுக்கு போவோம் என்று போய்ட்டாங்க .அன்னைக்கு முடிவு பண்ணினேன் . சூரியன் என்ற வார்த்தையைக்கூட வாசிக்கக்கூடாது என்று . ஆனால் பாருங்க இப்ப அந்த சூரியன் பற்றியே பதிவு போடவேண்டிய நிலை வந்துவிட்டது .
நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.

என்னைப்போல் நீங்க யாரும் மாட்டிக்கொள்ள கூடாது பாருங்க அதுக்குத்தான் இந்த தகவல் . சரி இனி உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில சொல்லலாம் .யார் அங்கே! ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

44 மறுமொழிகள் to சூரியன் யாருக்கு சொந்தம் !!! :