இன்று ஒரு தகவல் 16 - பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!!

53

னைவருக்கும் வணக்கம். முதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய நண்பர் பலா பட்டறை ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. சரி இனி விஷயத்திற்கு வருவோம். உலகத்தில் எல்லோரும் உயிர் வாழ என்ன என்ன தேவை ?. என்னடா இவன் ஏதோ பள்ளிக்கூட குழந்தையிடம் கேட்பது போல் கேட்கிறானே என்று யாரும் எண்ண வேண்டாம். காரணம் இருக்கிறது. உங்களால் என்னவென்று கணிக்க முடிகிறாதா..!!?? சரி நானே சொல்லிவிடுகிறேன்.
சுவாசிப்பதற்கு காற்று, உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் சரி இதில் சுவாசிக்க காற்றுக் கிடைத்துவிடும், அடுத்து உடுத்த உடையும் ஏராளம் இப்பொழுது. அதற்கடுத்து இருக்க இருப்பிடமும் கிடைத்துவிடும், சரி ஆனால் உண்ண உணவு !
இதில் என்ன இருக்கிறது அதுதான் கிடைக்கிறதே என்று நாம் சொல்ல நேர்ந்தால் அது நமது அறியாமை. ஆம் நாள் ஒன்றுக்கு அறிவியல் வளர்ச்சியால் உருவாக்கப்படும் இயந்திரமோ, அல்லது செல்போனோ இல்லை உணவு வகைகள். இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம் உணவு தானியங்கள். இந்த உணவு தானியங்கள் மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் நிகழ்வு இல்லை. இதற்கு முக்கியக் காரணம் மழை வருடம்தோரும் உலகத்தில் பொழியக்கூடிய மழையை கணக்கிட்டே நாம் நமக்குத் தேவையான உணவுத் தானியங்களை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், அந்த மழை இனி வரும் வருடங்களில் வரப்போவதில்லை என்றால் நமது நிலை என்னவாகும்?.ஆம். இந்த மிக மோசமான நிலையை விரைவில் எட்டிவிடும் இந்தியாவும்..!

ந்தியா..! என்று நீங்கள் வியப்புடன் கேட்க நேர்ந்தால் அதற்க்கும் காரணம் இருக்கிறது. தங்களிடம் இல்லையே..! என்று ஏங்கும் உலக நாடுகளில், இருப்பதை அழிக்கும் நாடுகளின் வரிசையில் நமது இந்தியாதான் முதல் இடம் . நான் சொல்வது வேறு ஒன்றும் இல்லை இயற்கையைத்தான். இறுதியாக எடுக்கப்பட்ட உலக இயற்கை கணக்கெடுப்பில் மொத்தம் அறுபது விழுக்காடு இயற்கை வளங்களை தொலைத்த (இல்லை இல்லை அழித்த என்று சொல்வதுதான் இங்கு சரி ) அழித்த என்ற பட்டியலில் முதல் இடத்தை எட்டிப்பிடித்த பெருமையை பெற்றிருக்கிறது நமது இந்தியத்திருநாடு .
ம். இனி வரும் காலங்களில் இயற்கை என்ற ஒன்றை நமது சந்ததிகள் பாடப்புத்தகங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ மட்டும்தான் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலை விரைவில் வரும். நாம் இன்று அனைவரும் பணத்தாலும் , அறிவியல் வளர்ச்சியாலும் , எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம், என்ற எண்ணத்தில் மரங்களை அழித்து இயற்கை என்ற வார்த்தையை இன்று விதவை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது நமது சமூகம். பணத்தை வைத்து உணவை வாங்கலாம் ஒருவேளை உணவு வியாபாரம் செய்யப்பட்டால். ஆனால், இனி வரும் காலங்களில் விற்பவனுக்கே உண்ண உணவு கிடைக்காமல் திண்டாடும் நிலையில், நாளை மறுநாள் அந்த உணவை உருவாக்கும் விவசாயிக்கு அந்த உணவு இல்லாத நிலையில், இந்த உலகத்தில் உங்களால், உங்கள் பணத்தால் அல்லது இந்த அசுர அறிவியல் வளர்ச்சியால் உங்களுக்குத் தேவையான உணவை வாங்கிவிட இயலுமா..!? சற்று சிந்தித்துப் பாருங்கள். சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இயற்கை அழிவிற்க்கும் இப்பொழுது இந்தியாவில் வெயில் அதிகரித்து இருப்பதற்கும், மழை பொய்த்து போனதற்க்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைக்கலாம் காரணம் உள்ளது.
ல் நீனோ-தெற்கத்திய அலைவு (El Niño-Southern Oscillation) ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் நினோ, லா நினா எனப்படும் இவை கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள். எல் நினோ என்பது எஸ்பானிய மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் பாலன் யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. லா நினா என்னும் சொல் சிறிய பெண்பிள்ளை என்னும் பொருளுடையது. ஒரு பக்கம், அதிக மழை பெய்ய வைத்து வெள்ளத்தையும், இன்னொரு பக்கம் மழையை குறைத்து அதிக வறட்சியையும் ஏற்படுத்தும் இது. வெப்ப நீரோட்டத்தை ஏற்படுத்துவதை "எல் நினோ' என்றும், குளிர்ந்த நீரோட்டத்தை "லா நினா' என்றும் அழைக்கின்றனர். கடலில் ஒரு சமயம், வெப்ப நீரோட்டத்தை ஏற்படுத்தும்; அதனால் வறட்சி நிலை ஏற்படும். இன்னொரு சமயம், குளிர்ந்த நீரோட்டத்தை ஏற்படுத்தும். அதனால், சில நாடுகளில் மழை அதிகமாகி வெள்ளம் ஏற்படும். கடந்த 19 ம் நூற்றாண்டில் "எல் நினோ'வை கண்டுபிடித்தது ஒரு சாதாரண மீனவ சிறுவன் தான். தென் அமெரிக்காவில் ஆன்கோவி தீவில் இருந்த இந்த சிறுவன் தான், கடலில் வித்தியாசமான ஒரு நீரோட்டம் இருப்பதை அறிந்தான். அதன் பின் தான், "எல் நினோ' ஆராய்ச்சி ஆரம்பித்தது.

1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.
ல் நீனோ-தெற்கத்திய அலைவு, உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வரட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை எதிர்வு கூறுவது தொடர்பில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனைஎதிர்வு கூறுவது தொடர்பில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் எல் நீனோ என்பது ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் சமயத்தில் பசுபிக் கடலில் எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரமாகத் தோன்றும் ஒரு வெப்ப நீரோட்டத்தையே குறித்தது. இந்த நீரோட்டம் சில வாரங்களே நீடிக்கும். ஆனால், 3-8 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நீரோட்டம் பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு நீடிக்கும். தற்காலத்தில் இதைதான் எல் நீனோ எனப் பொதுவாகக் கூறப்படுகிறது.உதாரணமாக 1991ல் உருவான எல் நீனோ 1995 வரை நீடித்தது. காலநிலையில் இதனது தாக்கங்கள் உலகளாவியது.
ர் எல் நீனோ வருடத்தில், வட ஆஸ்திரேலியாவின் மேலே காற்றழுத்த உயர்வுப்பகுதி தோன்றும். அதே சமயம், பசிபிக்கின் மையப்பகுதியிலும், எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரத்திலும் காற்றழுத்தம் குறைந்த பகுதிகள் தோன்றும். காற்றழுத்தத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றம், வழமையாக தெற்கு அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்றைக் குறைக்கும் அல்லது மறுபுறமாக வீசவைக்கும். இதனால் எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரத்தில் பூமத்தியரேகையின் வெப்பமான நீர் "தேங்குகிறது". வழமையான குளிர்ந்த சத்துநிறைந்த நீர் கடலடியிலிருந்து மேற்பரப்புக்கு வர வழியில்லாமல் போகிறது. இந்தப் பசிபிக் கடலின் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை இதன் காரணமாக வெகுவாகக் குறையும்.பசிபிக்கின் இந்தப் பக்கத்தில், அதாவது அமெரிக்கப் பக்கத்தில், மழைவீழ்ச்சியும் அதன் காரணமாக வெள்ளப்பெருக்கும் அதிகமாகும். முரணாக, ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் மழைவீழ்ச்சி குறைந்துவிடும். வரட்சியும் அதன் காரணமாக காட்டுத்தீயும் அதிகரிக்கும்.
1960-களில் தான் ஸ்காண்டிநேவிய விஞ்ஞானி ஜாக்கப் ஜெர்க்னஸ் என்பவர், "எல் நினோ'வுக்கும், பசிபிக் மற்றும் இந்துமாக்கடலில் ஏற்படும் வானிலை வானிலை மாற்றத்துக்கும் தொடர்பு உள்ளதை கண்டுபிடித்தார். "சுனாமி' போல இது, வந்த வேகத்தில் போகக்கூடிய இயற்கை சீற்றம் அல்ல; மாதக்கணக்கில் நீடிக்கும். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் "எல் நினோ' பாதிப்பை இப்போதே சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ம், 1998ல், ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளில் பெரும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி, வறட்சியை தாண்டவமாட வைத்த "எல் நினோ'வுக்கு இரண்டாயிரம் பேர் பலியாயினர்; பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சமீபத்தில், ஆஸ்திரேலிய வானிலை மையம் இந்தாண்டுக்கான "எல் நினோ' அறிக்கையை வெளியிட்டதை அடுத்து, இந்தியாவுக்கு பெரும் அச்சம் தொற்றிக்கொண்டு விட்டது. "பசிபிக் கடலில் ஏற்பட் டுள்ள மிக உச்சகட்ட வெப்ப நீரோட்டம் (எல் நினோ), அதன் தொடர்ச்சியான வானிலை மாற்றம் இப்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை தான். "எல் நினோ' இப்போது நடுத்தர நிலையில் தான் உள்ளது. அதன் வேகம் மிதமாகத்தான் உள்ளது. "இனி வரும் மாதங்களில் அதன் வேகம் அதிகமாகும்; பாதிப்பும் பரவும்' ஆஸ்திரேலிய வானிலை இயக்குனர் ஆன்ட்ரூ வாட்கின்ஸ் தெரிவித்தார். "அப்போது தான் அதன் உண்மையான கொடூர விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பருவ மழை சரிந்தது: தற்போதைய தாமதமான பருவ மழைக்கு காரணம் "எல் நினோ'தான் என்று அமெரிக்க "எல் நினோ' நிபுணர் வெர்னான் கவுஸ்கியும் உறுதி செய்துள்ளார்.
ல் நினோ: பல ஆண்டாக இந்த இயற்கை சீற்ற பூதம் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது என்றாலும், புதிதாக பார்த்தால், 1998ல் ஏற்பட்ட "எல் நினோ'பூதம் தான் பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று கூற வேண்டும். ஆஸ்திரேலியா, ஆசியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் உணவு உற்பத்தி இழப்பை ஏற்படுத்தியது; வறட்சி காரணமாக பல ஆயிரம் பேர் பலியாயினர். இதனால், ஆசிய நிதிச் சந்தையும் அப்போது பெரிதும் பலவீனப்பட்டது. ஒவ்வொரு முறையும் "எல் நினோ' ஏற்பட்டால், அதனால், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் கோதுமை உற்பத்தி அடிபடும்; இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் உற்பத்தி சரியும்; தாய்லாந்தில் ரப்பர் உற்பத்தி படுத்துவிடும். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த மூன்றாண்டாகவே, பருவ மழை குறைவாக உள்ளது. அதனால், சர்க்கரை உற்பத்தி படுத்து வருகிறது. அதனால், சர்க்கரை விலை பலமடங்கு உயர்ந்தும் விட்டது. இப்போது "எல் நினோ' வேகம் 50 சதவீதம் தான் உள்ளது; அடுத்த சில மாதங்களில் தெற்கு திசை நோக்கி வீசும் போது, வெப்பக்காற்று காரணமாக வானிலையில் பெரும் மாற்றம் ஏற்படும்.

துவரை காலமும் எல் நீனோ நடந்த ஆண்டுகள்:

1902-1903

1911-1912

1918-1919

1925-1926

1932-1933

1941-1942

1953-1954

1965-1966

1972-1973

1982-1983

1986-1987 1991-1992 1994-1995 1997-1998 -2005-2009
பொதுவாக, எல் நீனோ நடந்து முடிந்த பின்னர், காலநிலை சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும். ஆயினும், சில ஆண்டுகளில் தென் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்று மிகப் பலமாக இருக்கலாம். இதனால், பசிபிக்கின் மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகளில் வழமையைவிட அதிகமான குளிர் நீர் இருக்கும். இந்நிகழ்வை லா நீனோ என்பர்.
மெரிக்கா கண்காணிப்பு: "எல் நினோ' வேகத்தை கண்காணிக்க, அமெரிக்காவில் "வானிலை கணிப்பு மையம்' செயல்படுகிறது. அமெரிக்க கடலாய்வு மற்றும் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கு இந்த அமைப்பு, அடிக்கடி "எல் நினோ' பற்றி தகவல்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,"எல் நினோ பாதிப்பு ஜூன் - ஆகஸ்ட் இடையே ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இப்போது பருவமழை பாதிக்கப்பட்டிருப்பதற்கு "எல் நினோ' பாதிப்பும் முக்கிய காரணம். வறட்சி அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்று எச்சரித்துள்ளது. 81 அணைகளில் நீர் சரிவுபருவமழை குறைவாக இருப்பதால், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 81 பெரிய அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கங்கை, கோதாவரி, மகாநதி போன்ற முக்கிய அணைகளில் மொத்த கொள்ளளவில் 11 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போய், இப்போது வெறும் 9 சதவீதமாக குறைந்துள்ளது.
த்தனை ஆண்டுகளில், இந்தியாவின் பருவமழை நிலவரத்தை சரியாக கணிக்க முடியவல்லை. தொடர்ந்து வறட்சியும், வெள்ளமும் இருந்திருக்கிறது. சீரான பருவமழை நிலவரம் நம்மிடம் இருந்ததில்லை. அதனால், உணவு உற்பத்தி எப்போதும் உபரியாக இருந்ததே இல்லை. பற்றாக்குறை காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 1982 - 83ல், இந்தியாவில் "எல் நினோ' பாதிப்பு இருந்தது. அப்போது வறட்சி ஏற்பட்டு, உணவு உற்பத்தி 33 சதவீதம் பாதிக்கப்பட்டது. பருவமழை முன்னதாகவே ஆரம்பித்தது. ஒரு நாள் மட்டுமே 200 மி.மீ.,மழை தந்தது. அதே போல, முன்னதாகவே பருவமழை போயும் விட்டது. இதனால், வறட்சி அதிகரித்து, உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. இரு பருவ நிலை: எனினும், இந்தியாவை பொறுத்தவரை, பல்வேறு தட்பவெப்ப நிலையில் உற்பத்தி உள்ளதால், மொத்த உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அப்போது மொத்த உற்பத்தியில் 50 லட்சம் டன் தான் குறைந்தது. இது போல, 1978 - 79ல், "எல் நினோ' பாதிப்பு இருந்தது. அப்போது வறட்சி ஏற்பட்டு பாதி மாநிலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அரிசி தானிய உற்பத்தி இரண்டு கோடி டன்னுக்கு மேல் குறைந்து விட்டது.

வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.
ல் நீனோ உலகளவிய அளவில் காற்றோட்டங்களில் தாக்கம் விளைவிக்கக் கூடியது. பேரு, எக்குடோர் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் வரட்சி போன்றவற்றைத் தவிர, உலகின் பல பாகங்களிலும் அசாதாரண காலநிலையைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, 1982-83ல் தெற்கு ஆபிரிக்கா, தெற்கு இந்தியா, இலங்கை, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வரட்சி; பொலிவியா, கியூபா ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு; ஹவாயில் புயல். 1997-1998ல் ஐரோப்பாவின் பலபகுதிகளில் குளிர்கால வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது. 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ எல் நீனோ வெப்ப அலையால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் .

ப்போது மீண்டும் எல் நீனோ ஆரம்பமாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த செப்டெம்பரில் எடுத்த வெப்பநிலை அளவுகள் இதையே சுட்டுகின்றன. 1998ம் ஆண்டு மிகவெப்பமான ஆண்டு என்று கருதப்படுகிறது. ஏற்கனவே 2006ம் ஆண்டு பிரிட்டனில் மிகவெப்பமான ஆண்டு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் வரட்சிக்கும் ஆர்க்டிக் பகுதியில் அதிகமாக உருகும் பனிப் பாறைகளுக்கும் எல் நீனோ தான் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நீனோவும் உலக வெப்பமாக்கலும் சேர்ந்து இந்த ஆண்டு மீண்டும் மிகவெப்பமான ஆண்டாகவும் மிகமோசமான காலநிலை கொண்டதாகவும் இருக்கப் போகிறதா??????????????? இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்? இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர்.
ரிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் நாட்டின் விவசாய உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் மாநிலங்களிடையிலான மோதலும் தீவிரமாகும் என மத்திய அரசு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை இது மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் சரியும் என்று தெரிகிறது.எல் நினோ ஏற்படும்போதெல்லாம் இந்தியாவில் 70 சதவீதம் அளவுக்கு மழை குறைந்தது. 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் எல் நினோவின் தாக்கத்தை இந்தியா சந்தித்தது .பருவ மழை பெய்யாவிட்டால் நாட்டில் 65 சதவீத அளவுக்கு விவாசயம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.

ந்த ஆண்டு எல் நினோ ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாக ஆசிய நாடுகளை சர்வதேச வானிலை ஆய்வு மையம் (WMO) எச்சரித்துள்ளது.இந்தியாவில் ஏற்கனவே பருவ மழை வேகம் பிடிக்காத நிலையில் . கேரளத்திலும் மும்பை உள்ளிட்ட நாட்டின் மேற்குப் பகுதிகளில் எதிர்பார்த்தபடி ஆரம்பித்த பருவ மழை அப்படியே நின்றுவிட்டது. தொடர்ந்து மழை பெய்யவில்லை.நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனம், எல்நினோ பாதிப்பினால் இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் என்று கணித்துள்ளது. இந்த நிறுவனம் உலகத்தில் எல்நினோ - வானிலை ஆராய்ச்சியில் முன்னனி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல்.அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகையில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. இதுபோன்ற நிலை ஒருவேளை உலகில் ஏற்பட்டால் ,நமது பொருளாதாரம் ஒரு பெரிய அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான விலைவாசி உயர்வு (Hyper Inflation) நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்., ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பாலும், பசியாலும் , நோயாலும் உலக மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் காணாமல் போகலாம் என்று இந்த எல்நினோ ஆய்வு அறிக்கை கூறுவதாக எச்சரித்து இருக்கிறார் .
லகத்தில் இதுவரை இல்லாத ஒரு சமூக சீர்க்கேடு இந்தியாவில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அதுதான் இயற்கை அழிப்பு. கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தியாவில் மழையளவு மிகவும் குறைவு. அதேபோல் வெயில் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. காரணம் என்னவென்று யாராவது எப்பொழுதாவது யோசித்தது உண்டா? இல்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் சினிமா, அல்லது அரசியல், பக்கத்து வீட்டு கோழி நம்ம வீட்டுக்குள் வந்துவிட்டது, பக்கத்து நாட்டுக்காரன் நாம் நாட்டுக்குள் கை நீட்டி பேசுவிட்டான் என்று வாழ்க்கைக்கு ஒன்றும் உதவாத விஷயங்கள்தான். அறியாத மக்கள் பலர் அவர்கள்தான் தெரியாமல் தமக்கு தெரிந்தததை செய்கிறார்கள் என்றால் நாமும் அதையே செய்தால் நாம் பெற்ற கல்வி வளர்ச்சி இதுபோன்ற பொழுது போக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும்தானா ?

வ்வொரு நாடும் பாதுகாப்பு என்று சொல்லி தனது பலத்தை கண்டு மற்ற நாடுகள் அஞ்சவேண்டும் என்ற அறியாமையால் வருடத்திற்கு பல கோடி பணத்தை கொட்டி அணுகுண்டு தாயார் செய்கிறது. ஆனால் அந்த அணுகுண்டுகள் ஒன்றும் தேவை இல்லை. இந்த உலகை அழிக்க இதுபோன்ற இயற்கை வளங்களை எப்பொழுது அழிக்கத் தொடங்கினோமோ.. அப்பொழுதே நமக்கு நாமே குழித்தோண்ட தொடங்கிவிட்டோம் .

னைத்து பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் இதுநாள் வரை சினிமா, காதல், கிரிக்கெட், என்று வாழப்போகும் காலத்திற்க்கு உதவாத வாழ்ந்த நாட்கள் பற்றி பற்றி எத்தனையோ தொடர் பதிவு எழுதி இருக்கிறோம். இயன்றால் அனைவரும் இனி நாம் வாழப்போகும் காலத்திற்காக விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கை அழிவு பற்றி மீண்டும் ஒரு முறை அனைவரும் தொடர் பதிவு எழுதுங்கள். ஒரு கை ஓசை எழுப்பினால் அனைவருக்கும் கேட்பது கடினம்தான். நாம் அனைவரின் கரங்களும் ஒன்றாக இணைந்து எழுப்பும் ஓசை அனைவரையும் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்

யன்றால் மரங்களை வளர்த்து
இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்..!
இயலாவிட்டால் இருக்கும் மரங்களை
வெட்டாமல் உங்களை நீங்களே
காப்பாற்றிக்கொள்ளுங்கள் !

ம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை.

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

தாயான பரவசம் !!!

46

ன்னை என் நெஞ்சில் சுமப்பதால்
மறுபடி தாயான ஒரு பரவசம்....
சின்னஞ்சிறிய என் இதயத்தில்
எத்தனை அழகாக நீ..........


















ன் குறும்புகள் அனைத்தையும் பத்திரபடுத்துகிறேன்
உன்னை பார்க்கும் வரை
என் துணையாக .....

ன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
என்னுள் பத்திரப்படுத்துவதே
என் முழு நேர வேலையாகி விட்டது எனக்கு
ஆனாலும் சோரவில்லை நான் ...
.ஏனெனில்
என்னுள் நீ,,,,,

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து !!!

47

சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை !



முதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு !


க்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!


வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .!


திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!


ரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது,தொடரப்படும்போது வெற்றியாகிறது .!


நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .!


விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான் .!


னியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .!


பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை . ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு இல்லை .!


ணத்தின் மிகப்பெரிய பயன்,அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான் !


ற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷ யத்தை முடித்துக் காட்டுவதுதான் , நல்ல தலைமைப் பண்பின் அடையாளம் .!


யர் பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல . அது நமக்குச்சரிப்படாவிட்டால்,மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிடவேண்டும் .!


ங்களிடம் பணி புரிகிறவர்களை,மரியாதையோடும்,கண்ணியத்தொடும் நடத்துங்கள்,அவர்கள்தான் உங்களின் மிகப்பெரிய சொத்து .!


யன்றவரை அனைவரிடமும் மென்மையாகப் பேசுங்கள் பணிவாக நடந்துகொள்ளுங்கள் .!


நாளை என்பது மிக தாமதமாகும்.இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள் . !
யன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


 
மேலும் வாசிக்க.. >>

கருவறை & குப்பைத்தொட்டி புனிதம் !!!

54

குப்பைத் தொட்டிக் கூட
புனிதமாகத்தான் தோன்றுகிறது .
என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>

நீ இன்றி ஓர் இரவு !!!

29

சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில்
சந்தோசம்தான் ....
புரிந்தது உன் பார்வை
தீண்டிய நேரத்திலெல்லாம் ..
உன் மன இருந்தாலும்
அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்..
எப்படி இது சாத்தியம் ??
தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு .

நேற்றிரவு ...
உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள்
இன்றும் ஏனோ ஊனமாய்..
என்றும் இல்லாத நிசப்தம்
 அதிலும் ஓங்கி ஒலித்தபடி
வெகு நேரமாய் உன் நினைவுகள் ..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ...
பொம்மையை தவறவிட்ட குழந்தைபோல்....
வேறெதுவும் தோன்றாது கணணியை
வெறித்து நோக்கியபடி நெடுநேரமாய் நான்...
டுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 14 - குடை பிறந்த கதை !!!

47

''மழை வருது மழை வருது
குடை கொண்டுவா மானே
உன் மாராப்பிலே

வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டுவா மானே
உன் பேரன்பிலே ''

ன்று தொடங்கும் ஒரு இனிமையான பாடல் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த பாடல் வரிகள் உருவாக முக்கியக் காரணம் என்று நாம் பார்த்தால் அது குடையும், நிழலும்தான். ஒருவேளை இந்த குடை என்ற ஒன்று கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால். இந்த அழகான பாடல் வரிகளை எழுதுவதற்கு அந்த கவிஞனுக்கு கண்டிப்பாக கற்பனை பிறந்திருக்காது என்பதுதான் உண்மை . சரி அந்த பாடலுக்கும் இந்த குடைக்கும் அப்படி என்னதான் தொடர்பு என்று நீங்கள் கேட்பது எனக்கும் நன்றாக கேட்கிறது சொல்கிறேன் .

ழை  பெய்தாலும் குடை, வெயில் சுட்டெரித்தாலும் குடை என்று ஒவ்வொரு பருவநிலை மாற்றம் ஏற்படும் நேரத்தில் எல்லாம் இந்த மனித இனம் தேடும் ஒரே துணை குடைதான் . அப்படி இன்றும் பெரிய மாற்றங்களையோ, பெரிய தொழில்நுட்பத்தாக்கத்தையோ சந்திக்காமல் , மனித இனத்துக்குப் பெரும் தொண்டு ஆற்றி வருவது குடை. இன்று நேற்றல்ல, 4000 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து விட்டது குடை.
குடைக்கு ஆங்கிலத்தில் "அம்ப்ரெல்லா' என்று பெயர். இலத்தீன் மொழியில் "அம்ப்ரா' என்றால் "நிழல் தரும்' என்று பொருள். லத்தீன் வார்த்தையான "அம்ப்ரா'' விலிருந்துதான் ஆங்கில ""அம்ப்ரெலா'' வந்தது. 16ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாடுகளில் குடை உபயோகத் துக்கு வந்தது. அதுவும் பெண்கள் உபயோகிக்கும் தனிப் பொருளாகவே பாவிக்கப்பட்டு வந்தது. குடை - ஒற்றைக் கைக்கும், குவித்த கைக்கும் குடை எனப் பெயர். குடை சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் சுருக்கக்கூடிய குடையை கண்டுபிடித்தவர்கள் சீனர் என நம்பப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீகப் பயணியான ஜோனாஸ் ஹான்வே, பெண்களைப் போலவே குடையை உபயோகிக்கத் தொடங்கினார். இங்கி லாந்து நாட்டின் பொது இடங்களில் சுமார் 30 ஆண்டு காலம் குடையை வைத்துக் கொண்டே சுற்றி வந்தார். மெல்ல ஆண்களுக்கும் குடை பிடிக்கும் பழக்கம் வந்தது. அக்காலக் கட்டத்தில் குடை என்பதை அவரது பெயரை வைத்து ஹான்வே என்றே அழைக்கப்பட்டு வந்தது.
வெளியே வேலையாகச் சென்று விட்டு, எதிர்பாராத விதமாக மழை வந்து விட்டால், அப்போது தெரியும் குடையின் அருமை. சுட்டெரிக்கும் சூரியன் தந்த வெயிலின் கொடுமையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் குடையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான்.
ன்று முதல் இன்று வரை மழையிலிருந்தும் வெய்யிலிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள குடையை மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். முதன் முதலில் குடையை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். 4000ஆண்டுகளுக்கு முன்பே குடை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்தியா, எகிப்து, ஆசியா, கிரேக்கம், சீனா ஆகிய நாடுகளின் புராதன கலைப் படைப்புக்களில் குடையின் வடிவங்களைக் காணமுடிகிறது. .
முதன்முதலில் உருவாக்கப்பட்ட குடைகள் வெப்பத்திலிருந்து மனிதனைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன. அவை மரச் சக்கைகள் அல்லது எலும்புகள் , இலை, தழைகள் மற்றும் வைக்கோல்கள், மூங்கில் பட்டைகள் பின்னப்பட்டவையாக இருந்தன. மழை நேரத்தில் இந்தக் குடையைக் கொண்டு நனைந்து கொண்டுதான் போகவேண்டி இருந்தது. இதற்கு ஒரு புதிய வழியைச் சீனர்கள்தான் கண்டுபிடித்தனர். எனவே, நவீனக் குடையைக் கண்டுபிடித்த பெருமை சீனர்களைப் போய்சேர்ந்தது .
ழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் குடையை மாற்றியமைத்தவர்கள் சீனர்களே! வெயிலிருந்து காத்துக் கொள்ள அவர்கள் காகிதத்தால் செய்த குடையை உபயோகித்தார்கள். மழை வரும்போது பயன்படாமல் போனதால், அவர்கள் அதில் சிறு மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று. குடை செய்யப் பயன்படுத்திய காகிதத்தை மழை நீர் உறிஞ்சா வண்ணம் மாற்றினார்கள். மெழுகு மற்றும் அரக்கு பூசி, காகிதத்தின் மேல் நீர் ஒட்டாமல் உருண்டோடிவிடும் வண்ணம் செய்து விட்டார்கள். நீர் உறிஞ்சா கேன்வாஸ் துணிகளைப் பயன்படுத்தினார்கள். வளைந்த கைப்பிடிகளை கலைஞர்கள் கடினமான மரத்தினால் அழகுடன் கூடிய கலைப்பொருட்கள் போல் செய்து வந்தனர்.
முதலில் பெண்கள்தான் அதிகம் பயன்படுத்தினர். இதன்பிறகுதான் குடைகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் . கிரீஸிலும் ரோமிலும் குடைகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் பெரிய செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தது. சாதாரணமானவர்கள் குடை பிடித்துக் கொண்டு செல்லும் காட்சிகளை எங்கும் காண முடியாது. . 16-ம் நூற்றாண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளிலும் குடை பிரபலமடைந்தது. ஐரோப்பிய மழைக்காலங்களில் குடைகளை பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
குடைக்கென்றே ஒரு கடை 1830ஆம் ஆண்டு லண்டன் நகரில், ஜேம்ஸ் ச்மித் அன் சன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அந்தக் கடை இன்றும் 53, புது ஆக்ஸ் போர்டு வீதி, லண்டன் என்ற முகவரியில் இயங்கி வருவது கூடுதல் சுவாரஸ்யமான தகவல். 1825ஆம் ஆண்டுதான், சாமுவேல் ஃபாக்ஸ் என்பவர் இன்றுள்ளது போல் கம்பிகள் கொண்ட குடையை வடிவமை த்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்று, இங்கிலிஷ் ஸ்டீல் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மழையும், பனியும், ஈரப்பதமுமாயிருந்த ஐரோப்பிய நாடுகளில் குடையின் உபயோகம் பன்மடங்கு பெருகத் தொடங்கியது.
1885 ஆம் ஆண்டு, வில்லியம் கார்ட்டர் என்பவர் குடைகளை மாட்டும் ஸ்டாண்ட் ஒன்றை வடிவமைத்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே குடையின் அடுத்த பரிணாமம் வளரத் தொடங்கியது. மடக்கி நீளம் குறைத்துக் கொள்ளக்கூடிய  குடைகள் .வடிவமைக்கப்பட்டன.
ண்பர்களே இந்த குடைகள் பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>

நினைவுகள் சுமக்கும் கைதி !!!

34

காதல் கவிதை உனக்கு பிடிக்கும்
என்று சொன்னாய் என்பதற்காக
அழகான ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்டேன் !
அசத்தலான ஐயாயிரம் கவிதைகள் வாசித்து விட்டேன் !
ஆனால் அனைத்தும் அழகற்று போய்விடுகிறது
உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி !
னைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர !
விதைகள் கிறுக்கி கறை படிந்த பொழுதும் .
உன் பார்வை பட்ட மறுநோடி .
மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம் .!
மீண்டும் , மீண்டும் கிறுக்குக்கின்றேன் .
என்றாவது உன் இதயத்தில்
என் நினைவுகள் நிரப்பபபடலாம் என்ற
ஏதோ ஒரு நம்பிக்கையில் அதுவரை
நினைவுகளை சுமக்கும்
கைதியாய் உன்னுடன் நான்  !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 13 - சுறா , சுறா !!!

70

னைவருக்கும் வணக்கம் உலகத்தில் அதிசயம் என்றாலே அனைவருக்கும் அதன் மீது ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும் அதிலும் கடலில் பல அதிசயம் என்றால் சொல்லவா வேண்டும் . இப்பொழுது நாம் வசிக்கும் பூமியின் நிலப்பரப்பில் இதுவரை நாம் கண்டு பிடித்துள்ள உயிர்களுடன் ஒப்பிடும்பொழுது இதைப்போல் இன்னும் எழுபது சதவீதத்திற்க்கும் அதிகமான பல மர்மங்கள் கடலுக்குள் இருப்பதாக ஒரு மிகப்பெரிய அறிக்கை வெளியாகி உள்ளது . சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று அதில் ஒரு சிறிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . சிலருக்கு மீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும் பலருக்கு மீன்கள் என்றாலே பிடிக்காது . ஆனால் இந்த இரு தறபினரும் மீன்களை ரசிக்கும் தன்மை உடையவர்கள் என்பது மட்டும் உண்மை . பொதுவாக உனக்கு எந்த மீனைப் பார்த்தால் பயம் என்று கேட்டால் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அனைவரும் சொல்லும் ஒரே பதில் சுறா என்பதுதான் .


காரணம் என்று பார்த்தால் இந்த வகை மீன்கள்தான் அதிகமாக விபத்துக்களையும் . உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன . அதுதான் உண்மையும் கூட .சரி அந்த சுறாக்கலில் அப்படி என்னதான் இருக்கிறது நாமும் பார்த்துவிடுவோமே .

சுறாக்களில் பல வகை உண்டு. வெள்ளை சுறா தான் மிகவும் பயங்கரமானது, சுறா மீன்களில் அபூர்வமானதும்,பயங்கரமனதுமாக மனிதனையும் தின்பது. வெள்ளைச் சுறாதான். திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி. சுத்தித்தலை சுறாவும் கொடுமையான வகையைச் சார்ந்தது தான். சுறாக்களில் மந்தமான சுறாக்களும் உண்டு. இரையை வேட்டையாடுவதில் சுறாவுக்கு வழிமையான தாடையும், கூர்மையான பற்களும் உள்ளன. பொதுவாக, சுறா இறந்த பிராணிகளை தின்று விடும். எனவே, சுறாவை நீந்தும் தோட்டி என்பர்.

200 பவுண்ட் எடையுள்ள ஆமையைக்கூட ஒரு சுறாமீன் தின்றுவிடும். சுவாச உறுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு அது எப்போதும் வளைந்து வளைந்து சுழலும். மனிதனைத் தின்னும் சுறாமீன் கரையோரங்களுக்கு இரையைத் தேடி வருவதுண்டு. ஆட்களை இழுத்துக் கொண்டு உடனே கடலுக்குள் திரும்பிவிடும்.

ழ்கடலில் உணவுத் தட்டுப்பாடு சில சமயம் மீன்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை எதிர்கொள்ள பல மீன்கள் தனிச் சிறப்பான ஏற்பாடுகளை பெற்றுள்ளன. பெருந்தீனி விழுங்கிகள் (கியாஸ்மோடஸ்நிகர்) என்று ஒரு வகை மீன்கள் உண்டு. இவற்றின் வாய்களின் அளவைப் போன்று மும்மடங்கு பெரிய அளவுள்ள பிற உயிர்களை விழுங்குவதற்கு ஏற்ப அவற்றின் வயிறு நெகிழ்ந்து கொடுத்து விரிவடையும். இம்மீன்களின் வளைவான பிச்சுவாக்கத்தி போன்ற பற்கள் பிடித்த இரையை தப்பி விடாதவாறு பாதுகாக்கின்றன.

டற்பரப்பில் மனிதர்களுக்கு ஆபத்து வரும் வேளைகளில் டொல்பின்கள் மனிதர்களைக் காப்பாற்றுவதாக பல கதைகளில் படித்திருப்பீர்கள்.ஆழ்கடலில் பல ஆபத்துக்கள் நிறைந்திருக்கும், இவை பல வடிவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.இயற்கை அனர்த்தங்கள்,எதிர்பாராத விபத்துக்கள் தவிர பயங்கரமான ஆபத்துக்கள் பல இருக்கிறது.இப்படியான ஆபத்துக்கள் வரும் வேளையில் டொல்பின் இன மீன்கள் மனிதரைக் காப்பாற்றியதாக பல தகவல்கள் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் வெளியாகியிருக்கிறது.

ண்மையில் நியுசிலாந்து தீவிப்பகுதியை அண்மித்த கடலில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேவகர்களுக்கு இவ்வகையான அநுபவம் ஒன்று நேர்ந்துள்ளது.சுறா மீன்களில் அபூர்வமானதும்,பயங்கரமனதுமாக வெள்ளைச் சுறாக்கள் கணிக்கப்படுகிறது.வெள்ளைச் சுறாக்கள் பற்றிய ஒரு குறிப்பில் அவை சராசரியாக நான்கு மீட்டர் நீளம் முதல் ஆறு மீட்டர் வரை வளரக்கூடியது எனவும், முக்கோண வடிவிலான 3000 வரையான கூரிய பற்களையும் கொண்டிருக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ர்வதேச ரீதியில் 2003 ம் ஆண்டில் சுமார் 55 வெள்ளைச்சுறாத் தாக்குதல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.மனிதர்களை சாப்பிடுவதில் வெள்ளைச் சுறாக்களே முதலிடம் வகிக்கிறது.எனினும், South Africa, Namibia, California, Florida, Australia வின் அனைத்து பாகங்கள் மற்றும் Malta ஆகிய நாடுகள் வெள்ளைச் சுறாக்களை கொல்வதை சட்டரீதியாக தடைசெய்து, அவ்வினத்தைப் பாதுகாத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டந்த சில மாதங்களுக்கு முன்னர் நியிஸிலாந்தின் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உயிர்காக்கும் சேவகர்கள் Lifeguards குழு ஒன்று நீந்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென மூன்று மீட்டர் நீளமான வெள்ளைச் சுறா ஒன்று நெருங்கி, விரட்ட ஆரம்பித்திருக்கிறது.
இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை  அமைத்திருக்கின்றன.
வர்கள் பாதுகாப்பாக கரை சேரும் வரை அவர்களை இறுக்கமான வளையம் ஒன்றினை உருவாக்கி,நீந்திப் பாதுகாத்திருக்கின்றன இந்த டொல்பின்கள்.இவ்வேளையில், வெள்ளைச்சுறா மிகவும் நெருங்கியிருந்தாலும், டொல்பின்களின் இறுக்கமான வட்டத்திற்குள் நுழைய முடியாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னரே இவர்கள் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.இந்த ஆபத்தில் சிக்கிக்கொண்டவர்களில் ஒரு இளம் பெண், அன்றுதான் முதற்தடவையாக இக்குழுவில் இணைந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சுறாமீன் அதிக தூரம் நீந்திச்செல்லும் ஆற்றல் படைத்தது. இதில் நியிஸிலாந்தை சேர்ந்த ஒரு சுறாமீன் ஒரே மூச்சில் 3000 கி.மீ. தூரம் கடலில் நீந்திச்சென்று அதிக தூரம் பயணம் செய்த சுறாமீன் என்ற சாதனை படைத் துள்ளது.
டந்த மார்ச் மாதம் நிï சிலாந்தின் ஸ்டீவர்ட் தீவு பகுதியில் இந்த சுறாமீன் மீது எலக்ட்ரானிக் அடையாள அட்டை ஒன்றை நிபுணர்கள் பொருத்தினார்கள். இந்த பெண் சுறாமீனுக்கு கெரி என்றும் பெயரிட்டு இருந்தனர்.இந்த வெள்ளை சுறாமீன் விடாமல் 3000 கி.மீ. பயணம் செய்து ஆஸ்திரேலியா கடலுக்கு வந்து சேர்ந்தது. அந்த சுறாமீன் பயணம் செய்யும் இடம், ஆழம், பயணநேரம் ஆகியவற்றை அவ்வப்போது அந்த எலக்ட்ரானிக் அட்டை தெரிவித்தது.என்ன நண்பர்களே இந்த சுறா பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>

வெற்றிடமாய் நான் !!!

50

னைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 12 -அதிசயம் மருந்தாகும் பாம்புகள் !

40

னைவருக்கும் வணக்கம் ! முள்ள முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது . அது சில நேரங்களில் சரியாக பொருந்துகிறது என்றுதான் சொல்லவேண்டும் . பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அப்படிப்பட்ட பாம்பிலிருந்து எடுக்கப்படும் விஷமே மனிதனின் உடலில் ஏற்படும் பல கொடிய நோய்களை சரி செய்கிறது என்றால் நம்புவீர்களா ? . உண்மைதான் இப்படியும் சில அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது .


சில நோய்களுக்கு விஷமே மருந்தாக அமைவதை அறிந்திருக்கிறோம். குறிப்பாக பாம்பு விசத்தில் இருந்து பல ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இது போல கருந்தேள் விசத்தில் இருந்து மூளை புற்றுநோய்க்கு மருந்துதயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். தேள் விசத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது அதில் உள்ள விசத் தன்மை மருத்துவ குணம் கொண்டதாக மாறிவிடுகிறது. இந்த மருந்து மூளைப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் மற்றும் மூளையில் ஏற்படும் சதை வளர்ச்சி நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது தேள் விசத்தில் உள்ள மூலப்பொருள் சிதைவடைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக விசத்தில் உல்ள குறிப்பிட்ட புரோட்டின் புற்றுநோய் உருவாக்கும் செல்களைமட்டும் தேடிச் சென்று அழிக்கும் மருத்துவத்தன்மை பெற்றுவிடுகிறது.
ப்பொழுதெல்லாம் யாரும் பாம்பை கண்டால் அடித்துக் கொல்வதில்லையாம் அதார்க்கு மாறாக அதைப் பிடித்த்து வளர்த்து வருகிறார்களாம் . என்னங்க அப்படி பாக்குறீங்க ? உண்மைத்தாங்க சொன்னேன் . நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.  



மேலும் வாசிக்க.. >>

நடிகை ரம்பா டும் டும் முடிந்தது இன்று முடிந்தது !!!

8

டிகை ரம்பா திருமணம் திருமலையில் இன்று முடிந்தது. இதில் 50 வகையான அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் 11-ம் தேதி நடக்கிறது. பிரபல நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், திருப்பதி திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் இன்று காலை 11.44 மணிக்கு முடிந்தது.


தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி திரைப்படத் துறையினர் ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வருபவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அயிட்டங்களுடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
திரையுலகினர் அதிகம் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. திருமணத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் வரும் 11&ம் தேதி மாலை நடக்கிறது. இதில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
THANKS Dinakaran  

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>