இன்று ஒரு தகவல் 10 - "கேள்வி நாயகன்"சாக்ரடீஸ் மரணத்தின் விளிம்பில் !!!

கேள்வி நாயகன் சாக்ரடீஸ் இந்த உலகத்தை திருத்த போராடிய பல நிகழ்வுகளை பற்றி இறுதி பதிவில் இன்று ஒரு தகவல் 9 - "கேள்வி நாயகன்"சாக்ரடீஸ் கொடுத்து இருந்தேன் . அதன் பிறகு அவருக்கு என்ன தீர்ப்பு வழங்கப் பட்டது என்பது பற்றி அறிவதர்க்காக அனைவரும் ஆவலாக இருந்திருப்பீர்கள் இதோ அந்த கேள்வி நாயகனின் இறுதி நாட்களால் நம் அனைவரின் இமை நனைக்கப்போகும் நிகழ்வுகள்


தன் பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது . மரணம் , மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்யத் . தொடங்குகின்றனர் .

220 பேர் சாக்ரடீஸை மன்னித்துவிடுமாறும் , 281 பேர் மரணதண்டனை அளிக்கவும் வாக்களித்தனர் . நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.

ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார் .
ந்த தீர்ப்பு எனக்கு பெரிய தீங்கானது இல்லை. இடையீடு இல்லாதபடி ஒய்வு எடுப்பதே மரணம். எனவே, அதில் கெடுதல் இருக்க முடியாது. நல்ல மனிதனுக்கு வரும் மரணம் அவனை இன்னொரு சிறப்பான வாழ்வுக்கு அவனை கொண்டு செல்கிறது என்பது என் நம்பிக்கை. அம்மறு உலகத்தில் இருக்கும் நடுவர்கள் இத் தவறான தீர்ப்பை அழித்து நான் குற்றமற்றவன் என்பதை வெளிப்படுத்துவார்கள். என்னைப் போல் நியாயமற்ற முறையில் அரசால் தண்டிக்கப்பட்ட புகழ்பெற்ற அமரர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவேன். அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்பேன். அங்கு கேள்வி மூலம் நிஜங்களை கண்டடைய தடையொன்றும் இருக்காது. உண்மையை கண்டடைய முற்படுபவனை அங்கு சிறையில் அடைத்து தண்டனை கொடுக்கவும் முடியாது. இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய ஆதென்ஸ் நடுவர் குழுவுக்கு நன்றி என்று கூறினார் .

அவர் பேசி முடித்ததும், தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பை ஆதென்ஸ் அரசு பதினொருவர் அடங்கிய குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகிறது. இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
அப்போது, ஆதென்ஸ் நகரில் அப்பாலோ என்ற தெய்வத்தின் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விழாவில் ´அப்பாலோ´ தெய்வம் ஃடெலோஸ் என்றும் ஊரில் இருக்கும் திருத்தலத்திற்கு காணிக்கையாக பல பொருட்களை படகின் மூலம் திருத்தலத்திற்கு கொண்டு போய் காணிக்கையை கொடுத்துவிட்டு, அப்படகு திரும்பி ஆதென்ஸ் நகரத்திற்கு வரும் வரை அந்நகரில் இருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்ல மாட்டார்கள். அரசும் தண்டனைகளோ எதுவும் இருக்காமல் அவ்விழா நாட்களில் தெய்வத்தின் புனிதத்தன்மையை பாதுகாத்து வருவது ஐதீகமாக இருந்தது. காணிக்கை கொண்டு செல்லும் அப்படகை கூட மிகப் புனிதமாக பாதுகாத்து ´புனிதப்படகு´ என்று வழங்கி வந்தனர் என்றால், ஆதென்ஸ் மக்களின் அவ்விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இருப்பர் என்பதை உணரலாம்.

சாக்ரடீஸிக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, அப்பாலோ தெய்வத்தின் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. அப்பாலோவின் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஃடெலோஸ்க்கு சென்ற புனித படகு இன்னும் ஆதென்ஸிக்கு வரவில்லை. சாக்ரடீஸிக்கு தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. புனிதப்படகு சரியான காலப்படி ஆதென்ஸிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் காணவில்லை; என்னாயிற்று புனிதப்படகுக்கு என்ற கவலை ஒரு பக்கம். சரி சாக்ரடீஸை என்ன செய்வது? படகு வரும்வரை தற்காலிகமாக வெளியில் விடலாமா என்று யோசனை வந்தபோது சாக்ரடீஸிக்கு எதிராக இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். புனிதப்படகு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் சிறையில் அடைத்து வைத்திருந்து புனிதப்படகு வந்தபின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது.

30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்துவைக்கவேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
விஷம் கொடுத்து ஒருவரைக் கொல்லும் வழக்கம் பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்பதல்ல. இன்றும் கூட அமெரிக்காவில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, விஷ ஊசி போட்டுத் தண்டனையை நிறைவேற்றுகின்றனர். மின்சார நாற்காலியில் கொல்லுவதைவிட விஷ ஊசியால் கொல்லுவது மனிதாபிமானம் மிக்கதாம்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.

சாக்ரடீஸ் சிறையில் அடைபட்டு மரண தண்டனையை எதிர் நோக்கி இருந்த காலம். ஒரு நாள் பக்கத்து அறையில் அடைபட்டு இருந்த கைதி ஒருவர் நரம்பு இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசையை வெகுவாக ரசித்த சாக்ரடீஸ், அந்த கைதியிடம் சென்று `இந்த வாத்தியத்தை எப்படி இசைப்பது? என எனக்கும் சொல்லிக் கொடுங்கள்' என்று கேட்டார்.அந்த கைதிக்கு பயங்கர வியப்பு. `நீங்களோ மரண தண்டனை பெற்றவர். விரைவில் உயிரிழக்கப் போகும் நீங்கள் இதைக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?' என்று கேட்டார்.அதற்கு சாக்ரடீஸ், `மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டேன் என்ற திருப்தியுடன் சாகலாம் அல்லவா? அதனால்தான்' என்றார். இதைக் கேட்ட கைதி மீண்டும் வியப்பில் அசந்துபோனார்
சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.

றுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.
அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.
 
“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.
ண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார் அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின!

ம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

23 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 10 - "கேள்வி நாயகன்"சாக்ரடீஸ் மரணத்தின் விளிம்பில் !!! :