சாயம்போன கனவுகள் !!!

வ்வொரு இரவின் நிசப்தத்திலும்
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,
தாய் மடியை நினைவூட்டும் 'மெமரிபோர்ம்' மெத்தையும்
'கூஸ்பெதர்' தலைஅணையும்
இப்போதெல்லாம் என்னை ஏனோ
முள்ளாய் மாறி தினம் தினம்
என்னை வதம் செய்கிறது ,,..
தூக்கம் வராமல் உருண்டு படுத்து
ஏதோ ஒருநொடியில் உறங்கிப் போனாலும்
நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில்
என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

44 மறுமொழிகள் to சாயம்போன கனவுகள் !!! :