நினைவுகள் சுமக்கும் கைதி !!!

காதல் கவிதை உனக்கு பிடிக்கும்
என்று சொன்னாய் என்பதற்காக
அழகான ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்டேன் !
அசத்தலான ஐயாயிரம் கவிதைகள் வாசித்து விட்டேன் !
ஆனால் அனைத்தும் அழகற்று போய்விடுகிறது
உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி !
னைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர !
விதைகள் கிறுக்கி கறை படிந்த பொழுதும் .
உன் பார்வை பட்ட மறுநோடி .
மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம் .!
மீண்டும் , மீண்டும் கிறுக்குக்கின்றேன் .
என்றாவது உன் இதயத்தில்
என் நினைவுகள் நிரப்பபபடலாம் என்ற
ஏதோ ஒரு நம்பிக்கையில் அதுவரை
நினைவுகளை சுமக்கும்
கைதியாய் உன்னுடன் நான்  !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

34 மறுமொழிகள் to நினைவுகள் சுமக்கும் கைதி !!! :