எஞ்சிய நினைவுகள் !!!


மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறேன்
என்று தெரிந்தும் முயற்சிக்கிறேன் .
எஞ்சிய நினைவுகள் தீர்ந்துபோகுமோ
என்ற நடுக்கத்தில் !.
நீ எப்பொழுதோ வீசி சென்ற
புன்னகையில் சிக்கிக்கொண்டவனாய்
இன்றும் உன் அனுமதி பெறாத
கைதியாய் உன் இதயத்தில் நான் !...
ன்னுடன் நான் மணிக்கணக்கில் பேசினாலும்
முற்றுப்பெறாத வானமாய் என் மனம்!!
பிரியும்போது ஒருநிமிடம் மௌனம்,,,,
உன் ஆழப்பெருமூச்சு,,,,,
ட !
இப்போது என் வானம்
முற்று பெற்றுவிட்டது விட்டது.

ம் என்னவளே ,,,
மணித்துளிகள் பல கரைத்தும்
புரியவைக்க முடியாத உன் மனதை
அந்த ஒருநிமிட மௌனத்தால்
அழகாக புரிய வைத்துவிட்டாய்!!

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

22 மறுமொழிகள் to எஞ்சிய நினைவுகள் !!! :