தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!!

னிமையின்
நீளம் நீண்டு ,நீண்டு
கற்பனைகள் தீரத் தொடக்கி விட்டது
உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !.
தீர்ந்து போகும் உன் நினைவுகளை !
 நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !
தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .

ன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
 நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

33 மறுமொழிகள் to தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!! :