இன்று ஒரு தகவல் 30 - உலகப் பணக்காரர் PART 1 !!!

னைவருக்கும் வணக்கம். இன்று நாம் அனைவரும் இன்று ஒரு தகவலில் உலகத்தில்மிகப்பெரிய பணக்காரர் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். என்ன நண்பர்களே..!
 மிகப்பெரிய பணக்காரர் என்றவுடன் உங்கள் அனைவரின் மனதிலும் தோன்றும் யாரும் இல்லை. அப்படியென்றால் யாராக இருக்கும் என்பதுதானே உங்களின் சந்தேகம் சொல்கிறேன். அவர் தான் உலகத்தில் மிகப்பெரிய பணக்காரக் கடவுளாம். என்ன நண்பர்களே..! இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும் கடவுளாம். என்ன நண்பர்களே..! இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும் யார் அந்த பணக்காரக் கடவுள் (Rich God) என்று.

சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த கடவுள் இருக்கும் திருப்பதி மலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி முதலில் இந்த திருப்பதி என்றால் என்ன? எதற்கு? திருப்பதி என்று பெயர் வந்தது என்று பார்ப்போம். தமிழில் திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் லக்ஷ்மியின் (திரு) கணவன்(பதி) என்று  எடுத்துக்கொள்ளப் படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் எடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது.

1.சேஷாத்திரி
2.நீலாத்திரி,
3.கருடாத்திரி,
4.அஞ்சனாத்திரி,
5.வ்ரிஷபத்ரி,
6.நாராயணாத்ரி,
7.வேங்கடாத்ரி என இவ்வாறு ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு ”சேஷாசலம்” என்று பெயர் உள்ளதாம்.

லகத்தில் உள்ள மலைகளிலே மிகவும் பழையான மலைகளின் பட்டியலில் இந்த திருமலை மலைகள் இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்.

ன்று நம் அனைவருக்கும்தெரிந்த திருப்பதி என்ற பெயர் கி.மு 300-500 ஆண்டுகளுக்கு முன்பு ”திருவேங்கடம்” என்ற பெயரில்தான் அனைவராலும் அழைக்கப்பட்டு வந்ததாம். திருமலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் மலைப்பாதையில் ”சிலாதோரணம்”என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப்படிமம் இயற்கையாக அமைந்த ஒன்றாகும். ஆசியாவில் இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை. 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தோரணத்தின் நீளம் 25 அடி. உயரம் 10அடி. இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாக கூறுகிறார்கள்.

ங்குள்ள கோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக குறிப்புகள் கூறுகின்றன . இந்த வெங்கடேஸ்வரா கோவில் எப்பொழுது கட்டப்பட்டது என்பது பற்றி இதுவரை எந்த குறிப்புகளும் சரியாகக் கிடைக்கவில்லையாம் ஆனால் இது பல ராஜாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி. 4ம்
நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10ம்
நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி.17ம் நூற்றாண்டில் விஜயநகர
பேரரசாலும் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. விஜய நகர
பேரரசின் மிகப்பெரிய மன்னனான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக  தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார்.
 திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் ”சந்திரகிரி” என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. இது போன்ற செய்திகள் மட்டும் இதுவரை நமக்கு கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகளின் உதவியால் கிடைத்திருக்கிறதாம்.

  திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக் கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர்.என்று சொன்னால்நம்புவீர்களா உண்மைதான் இது வரை இந்த பணக்கார கடவுள் திருப்பதி பற்றி நீங்கள் யாரும் அறிந்திராத பல வியப்புமிக்கு தகவல்கள் உங்களுக்காக எனது அடுத்தப் பதிவில் எதிர் பார்புடன் காத்திருங்கள் .

                                                   பணக்காரர் மீண்டும் வருவார்ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

.

36 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 30 - உலகப் பணக்காரர் PART 1 !!! :