நிஜங்களின் தாகம் தீர்க்கும் கனவுகள் !!!

 நிஜங்களில் தொலைந்து போகும்
ஆசைகள் அனைத்தையும் மீண்டும்
ஒன்றாய் என் இரவுக்குள் நிரப்பும்
கருவூலமாய் என் கனவுகள் .

மீண்டும் மீண்டும் நிலையற்ற
ஆசைகள் அனைத்தையும் நித்தம்
என் எண்ணங்களில் குவிக்கும் சொர்க்கம் .


யிரம் ஆசைகள் ஆடையின்றி
இன்றும் அங்கும் இங்கும் .
நிலையற்ற நீர்குமிழிகள் போல்
தினம் தினம் தீர்ந்துபோகும் இரவுக்குள்
விரும்பியே தொலைந்து போகிறது
என் கனவுகளும் !


ச்சில் வற்றி தொண்டை காய்ந்து
விழிகள் நீர் தேடும்
தாகத்தின் தருணங்களில் கூட
நிஜத்தின் அருவிகளை வெறுக்கிறேன் !
ஆனால்
கனவில் கொதிக்கும் பாலைவனம்
கண்டு தாகம் தீர்ந்ததாய் பரவசம் அடைகிறேன் . .

மோகத்தின் உச்சத்தில் கூட
மலரின் தீண்டலை வெறுக்கிறேன் .
கனவுகளின் முட்களில் தெரிந்தே
கிழிந்துபோக ஆசைப்படுகிறேன் .

னித்துளி மோதி வலி கண்டதாய்
நிஜத்தில் உணர்கிறேன்
சுவற்றில் முட்டியும் சொர்க்கம் கண்டதாய்
கனவில் சிரிக்கிறேன் ....

மொத்தத்தில் கனவுக்குள் நிஜத்தை தொலைத்து
நிறைவேற மறுக்கும் நிஜத்தை வெறுத்து
நிலையற்று ஜெயிக்கும் கனவை ரசித்து
தினம் கண்மூடி கடந்துகொண்டிருக்கிறேன்
நானும் ஒரு சராசரி மனிதன் என்று சொல்லிக்கொள்ளும்
அங்கங்களின் சிறு அடையாளங்களுடன்
தினம் தினம் இந்த பூமியில் ..........

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

22 மறுமொழிகள் to நிஜங்களின் தாகம் தீர்க்கும் கனவுகள் !!! :