பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள் -நட்பின் பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க ! கவிஞர் பனித்துளி சங்கர்

டல் கடந்து வந்த முதல் நாள்
பகலும் இறந்துபோனது
அன்னையின் ஞாபகம் கண்ணீர் சிந்தினேன்
யார் என்றே தெரியாமல்
என் கண்ணீர் துடைத்தாய் !
றுநாள் கையில் பணம் இல்லை
வாய் பேசாத ஊமையாய் மொழி தெரியாமல்
பசியால் வாடினேன்
வார்த்தைகள் எதுவும் வீசாமல்
வயிறு நிறைய சோறு போட்டு
என் பசியாற்றினாய் !
வேற்று மொழி கற்கும் ஆசையில்
யாரோ முகம் தெரியாத ஒருவன்
சொல்லித்தந்த வார்த்தையைப் பலர் முன்னிலையில்
தவறு என்று தெரியாது உச்சரிக்க இருந்த
அனைவரின் கைகளும் கோபத்தில் என் சட்டையை
எட்டிப்பிடித்ததை அறிந்து எங்கோ இருந்து
ஓடி வந்து யார் மேலடா கை வைத்தீர்கள்
அவன் என் நண்பன் என்றாயடா !

ன் அன்னை தந்தப் பாசம் ,
என் தந்தை தந்த ஒழுக்கம் ,
என் குரு தந்தக் கல்வி
என் உறவுகள் தந்தப்பாதுகாப்பு
என் ஊரார் தந்த நேசம்
அனைத்தும் தோற்றுப்போனதடா
நீ தந்த நட்பு என்ற
அந்த ஒற்றை வார்த்தையில் !

ஆம் நண்பர்களே என் உயிர் நண்பர் கண்ணன் அவர்கள் இன்று இருபத்தி எட்டாவது பிறந்த நாளில் மகிழ்ச்சியுடன் அடியெடுத்து வைக்கிறார் என்னுடன் சேர்ந்து இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பலகலையும்  பெற்று சிறப்புடன் வாழ நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை மலர்போல தூவ உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .

ன்றும் உங்கள் அன்பிற்கினிய

பனித்துளி சங்கர்
சசிக்குமார்
கார்த்திக்
ப்ரவீன்குமார்
முத்துக்குமார் ..


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .

34 மறுமொழிகள் to பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள் -நட்பின் பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க ! கவிஞர் பனித்துளி சங்கர் :