தீர மறுக்கும் கள்ளிப்பால் வாசம் (சிசுக் கொலை ) !!!

ம்மா
பத்து மாதம் வலிகள் ஆயிரம் தாங்கி
என்னை சுமந்தாய் ,
ஆனால் இன்று நான் பிறந்து
பத்து நிமிடங்கள் இல்லை
என் மழலை முகத்தை ரசிப்பதற்கு முன்
என் அறிகுறியைத் தேடியல்லவா
அவசர அவசரமாக அலைகிறது உன் கண்கள்
நான் ஆணா, பெண்ணா
என்று அறிந்துகொ(ல்ல)ள்ள !
ண் என்றால் மார்போடு அணைத்துக்கொள்கிறாய்
ஆயிரம் வார்த்தைகள் மலர்போல் பேசி
அள்ளிப் பால் கொடுக்கிறாய் !
பெண் என்றால் வார்த்தைகள்
தீர்ந்து போனாவளாய்
எட்டி நின்று என்னைப் பார்த்து
கள்ளிப் பால் கொடுத்து கொல்ல சொல்கிறாய் !

ன்ன பிழை செய்தேன் தாயே
என்னை கொல்வதற்காகவா கருவுற்றாய்...??!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

21 மறுமொழிகள் to தீர மறுக்கும் கள்ளிப்பால் வாசம் (சிசுக் கொலை ) !!! :