போதும் நிறுத்துங்கள் அழித்ததும் அழிந்ததும் !!!

ன்றுவரை யாராலும் வெல்லமுடியாத
அதிசயம் நீ...
தொன்று தொட்டு மெய் ஞானியும் விஞ்ஞானியும்
அடக்கியாள ஆசைப்படும்
இன்னதென்று சொல்லமுடியாத
அற்புத சக்தி நீ
 
பொறுமைக்கு பெயர் போனவளும்
நீ தான்
மறுகணமே பெரும் கோபத்தின்
எடுத்துக்காட்டும் நீதான்

னாலும் நீ இப்பொழுதெல்லாம்
அடிக்கடி கோவப்படுகிறாய் !
உன்னழகை சீர் குலைத்து சீண்டி விளையாடுவதால்
வந்த கோபமா இது ?

ன் கோபம் எனக்கு புரிகிறது!
எனக்கு மட்டுமே புரிந்தென்ன பயன்????????
போதும் நிறுத்துங்கள் அழித்ததும், அழிந்ததும் .!..............


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

20 மறுமொழிகள் to போதும் நிறுத்துங்கள் அழித்ததும் அழிந்ததும் !!! :