புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !!!

யற்கை அன்னை
என்று சொல்கிறோம் ஆனால்
துரியோதனர்களாய் மாறி தினமும்
அவளை துகில் உரிகிறோம்
அவளுகென்று ஒரு துணி நீ கொடுக்க வேண்டாம்
இருக்கும் துணியையாவது விட்டுவைக்க கூடாதா??
 
காடு மலைகளும் நதிகளும் கடல்களும்
ஓடும் மீன்களும் பாடும் பறவைகளும்
விலங்குகளும் தாவரங்களும்
நீலவானமும் கண்சிமிட்டும் மின்மினியும்,,,,,,
இவையெல்லாம் மட்டுமா இயற்கை ??
பிறப்பின் காரணம் தெரியாத வரையிலும்
இறப்பின் தருணம் அறியாத வரையிலும்
நீயும்தான் இயற்கையில் அடக்கம்!!!!!
நீஇயற்கையை அழித்து
இரசாயனத்தை பெருக்குவது உன்மீது நீயே
வைத்துக்கொள்ளும் வெடிகுண்டுக்கு சமன் .
புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !.

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

28 மறுமொழிகள் to புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !!! :