இருக்கும் போதும் கவிதை இறந்த பின்பும் கவிதை..!!!

நாங்கள் உம் நிலத்துக்கு ஆசைப்படவில்லை
நீயோ எம் நிலம் வேண்டுமென்றாய்...
முதுகெலும்பு இல்லாத புழு கூட
போராடித்தான் சாகுமாம்..!
நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம்
என நினைத்தாய்....!!??
அத்தோடு விட்டாயா..!?

எம் மண்ணில் பிணம் விதைத்தாய்..!
எம் பெண்டிரின் கற்பை கருவறுத்தாய்..!
பிஞ்சு மழலைகள் என்று கூடப்பாராது
தூக்கிலிட்டாய்..! துண்டாக்கினாய்..!
இருப்பிடத்தில் குண்டு எறிந்தாய்..!
நெருப்புக் குண்டுகளின் பசி தீர்த்த
எச்சங்கலாய் எங்கள் உடல்கள்...!
ண்ண உணவின்றி,
உறங்க பாயின்றி,
எத்தனைபேர் மரநிழலில்
அட, மரத்தை கூட நீ விட்டு
வைக்கவில்லையே!
பட்டினியால் பலபேரும்.. நீ
கொட்டிய குண்டினாலே பல பேரும்
துடித்து இறந்து ஏன் உனக்கு
வலிக்கவில்லை?
மனித உடம்பெடுத்து வந்த
சாத்தானா நீ?
மாண்டவர் மீளார் என துயர்
ஆற்றலாம் ஆனால்
இழந்தவர் துயர் எப்படி போகும் ??
கூடிவாழ்ந்த சொந்தத்தை....
எறும்புபோல் சேர்த்த சொத்தை
இழந்த துயர் கூட நாளடைவில்
ஆறிவிடும்....ஆனால்
தன் அங்கம் இழந்தவர் துயரோ
ஆயுள்வரை அல்லவா?
'அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் என்பர்'
உண்மையா என தெரியாது
ஆனால் இவர்களின் கதறலும்
சாபமும் நிச்சயம்
உன்னை வந்துசூழும்
இது சத்தியம்..!!
* * * * * * * * * * * *
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * * * * * * * *

27 மறுமொழிகள் to இருக்கும் போதும் கவிதை இறந்த பின்பும் கவிதை..!!! :