மரணத்தின் விளிம்பில் மழலையின் வாசகங்கள் !!!

ன்னதவம் செய்துவிட்டேன் என் தாயே
உன்னை தாயாக நான் அடைய !
சிறுவயதில் உனக்கும் எனக்கும்
அடிக்கடி சண்டை!

செய்யாதே என நீயும் செய்வேன் என நானும்
போர்க்களம் ஆகும் வீடே!
புரிகிறது இப்போது சிற்பியாய் நீ இருந்து
செதுக்கி இருக்கிறாய் என்னை!
 புரியவில்லை அப்போது மன்னித்துவிடு என்னை
என் அன்புத்தாயே!
நான் நோய்வாய்ப்பட்டால்
உருக்குலைந்து போவதென்னவோ நீதான்!
நான் அழநேர்ந்தால் உன் கண்ணிலும்
கண்ணீர்த்துளி!
ன் சிரிப்பில் உன் முகத்தில் தெரியும்
ஒரு சூர்யோதயம் !

னால் இன்றோ
முகவரி தொலைத்தக் கடிதமாய்
வீதிகளில் விழுந்துக் கிடக்கிறேன் .
மனித உடல் கொண்ட மிருகங்களின்
இந்த சுய நல பூமியில் இன்னும்
ஒரு நொடி உயிர் வாழ
நான் விரும்பவில்லை .
கா த்திரு தாயே

நானும்

வந்துவிடுகிறேன் விரைவில்
இவர்களில் யாரேனும் ஒருவரால்
கொல்லப்பட்டு
காத்திருக்கும் இந்த கழுகின்
பசி தீர்த்துவிட்டு .!
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

30 மறுமொழிகள் to மரணத்தின் விளிம்பில் மழலையின் வாசகங்கள் !!! :