பனித்துளி சங்கரின் - எதிர்பாராத கவிதை !!!


யிரம் கவிதை வாசித்தும் அதில் எதுவும் ரசிக்காமல் ஏமாந்து போய் இருக்கிறது இந்த இதயம் ஆனால் சில நேரங்களில் எதார்த்தமாக கண்களில் படும் ஏதோ சில வரிகள் ஆயிரம் கவிதைகளின் அர்த்தம் சொல்லும் சந்தோஷத்தை எதிர்பாராமல் இதயங்கள் எங்கும் நிரப்பி சென்று விடுகின்றன . அந்த வகையில்
நேற்று இரவு ஒரு கவிதை என் இதயத்தில் எல்லா நரம்புகளையும் ஒரே சமயத்தில் மீட்டிய கவிதை .
ன் வீட்டைத் தடவிக்கொண்டோடும்
காலங்கடந்த நதியே நீ சொல் !
உன் மாறாத ஓட்டத்தில்
உன்னால் மறக்க முடியாத
நிகழ்ச்சி எது .
நுரை சிரிப்போடு நதி சொன்னது .
முண்டும் முடுச்சுமான
மரக்கட்டையொன்றில்
ஒரு குழந்தையைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது .

டடா - அந்த நதியின் அலைகளில் நான் நனைந்தேன் .

கவிதையில் - சில நேரங்களில் அலங்காரங்கள் கூட அர்த்தத்தைக் கொன்று விடுக்கிறது என்பதை நேற்று உணர்ந்தேன் .ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

24 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் - எதிர்பாராத கவிதை !!! :