பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 2 !!!

னைவருக்கும் வணக்கம் .என்னதான் புதுமைகள் தினம்தோரும் தோன்றி மறைந்தாலும் பழமைகள் என்றும் ஒரு புதுமைதான் . அதிலும் புகைப்படங்கள் என்றும் இளமை தீராத ஒரு அதிசயங்கள்தான் . அந்த வகையில் எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு மடலில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்டப்புகைப்படங்கள் கிடைத்தது .இதோ உங்களையும் மகிழ்விக்க அந்த புகைப்படங்களும் அதற்கான எனது புகைப்படக்கவிதையும் பார்த்தும் படித்தும் மகிழுங்கள் . மகிழுங்கள் .
ன்று செயற்கை இல்லை
அதனால்தான் மனிதன் இயற்கையோடு
வாழ்ந்திருக்கிறான்
ஆனால்
இன்று செயற்கை
மட்டும்தான் இருக்கிறது
அதனால்தானோ மனிதன்
இயற்கையை மறந்திருக்கிறான் !

ன்று வீட்டின் சுவர்களையே
இயற்கையில்தான் செய்திருக்கிறான்
ஆனால்
இன்று அதே இடத்தில் உருவான
வீட்டின் சுவர்களில் வரைந்த
செயற்கை ஓவியங்களில் மட்டும்தான்
எஞ்சி இருக்கிறது இயற்கை !

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்
மரங்களையும் , மனிதர்களையும்
பார்த்து ரசிக்கும் இந்த தருணம்
பொக்கிஷம்தான் !

ன்றே எஞ்சி இருக்கும்
மரங்களையும் , இயற்கையையும்
புகைப்படம் எடுத்துவைத்துகொள்கிறேன்
இன்னும் ஒரு சில ஆண்டுகளில்
உலகத்தில் எங்கும் கிடைக்காத
அரிய பொக்கிஷம் என்று
இந்தப் புகைப்படங்கள் மாறிப்போகலாம் !


 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

22 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 2 !!! :