இன்று ஒரு தகவல் 36- கால தாமதம் (அரிஸ்டாட்டில்) !!!

னைவருக்கும் வணக்கம். பொதுவாக நம் அனைவரின் மனதிலும் சில எண்ணங்கள் அவ்வப்பொழுது மலர்ந்து நாம் எதிர்பாராமல் உதிர்ந்தும் போய்விடுகிறது. அது போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயல்களும் ஏதேனும் ஒரு காரணத்தால் பலருக்கு சரியாக அமைவது இல்லை. காரணம் என்னவென்று பலரிடம் கேட்டால் இதை நான் பின்பு செய்துக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன் . அல்லது எனக்கு நேரம் இல்லை என்று இப்படி பல காரணங்கள் ஒவ்வொருவரின் பதில்களிலும் கரை புரண்டு ஓடும்.

நாம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் யாரோ ஒருவரின் உதவியையோ அல்லது யாரோ ஒருவரின் ஆலோசனை வேண்டியோ நமது நேரத்தை அந்த காத்திருப்பின் தருணங்களில் நழுவவிட்டு இறுதியில் தோல்வி என்று தலையில் அடித்துகொண்டிருக்கிறோம். இதே
எண்ணம் பலருக்கு தங்களின் குழந்தைகளின் விசயத்திலும் தொடரத்தான்
செய்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு அம்மா என்று உச்சரிக்க கற்றுக்கொடுக்க பலரின் ஆலோசனை வேண்டி காத்திருக்கிறார்கள் இன்னும் நம்மில் பலரின் பெற்றோர் !. இதுபோன்ற தவறுகளை தாங்களே தெரிந்தே செய்துவிட்டு பின்பு தங்களின் குழந்தைகளின் திறமைகளுக்கு மேல் பல குறைகளை வீசிக்கொண்டி இருக்கிறார்கள் .

ப்படித்தான் ஒரு முறை தத்துவமேதை அரிஸ்டாட்டிலைத் தேடி ஒரு இளம் வயதுப் பெண் வந்திருக்கிறாள். அப்பொழுது அவளிடம் வந்த காரணத்தை அரிஸ்டாட்டில் கேட்டபொழுது அதற்கு பதில் கொடுத்த அந்த பெண் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எப்பொழுதில் இருந்து நான் என் குழந்தைக்கு நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்க வேண்டும் என்று கேட்டு செல்வதற்காகவே வந்ததாக கூறியிருக்கிறார். இதைக் கேட்ட தத்துவமேதை அரிஸ்டாட்டில் இப்பொழுது உங்களின் குழந்தைக்கு வயது என்ன ஆகிறது என்று கேட்க, அந்த பெண்ணோ 6 வயது ஆகிறது என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பதில் கொடுத்த தத்துவமேதை அரிஸ்டாட்டிலோ இப்பொழுதே உனது குழந்தையின் ஆறு வருடத்தை
வீணாக்கி விட்டாய் இன்னும் தாமதிக்காமல் உடனே சென்று நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்கு என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.

டிஸ்கி : துபோன்று இன்னும் எத்தனையோ பெற்றோர்கள். தங்களின் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை சொல்லிக் கொடுப்பதற்கு கூட இன்னும் பலரின் அனுமதி வேண்டியும் ஆலோசனை வேண்டியும் காத்திருக்கின்றனர். எப்பொழுது குறையப்போகிறதோ இதுபோன்ற எதிர்பார்ப்புகளிலும், காத்திருப்புகளிலும் தெரிந்தே தங்கள் குழந்தைகளின் அறிவை தொலைக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை.!?


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

24 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 36- கால தாமதம் (அரிஸ்டாட்டில்) !!! :