! இன்று ஒரு தகவல் 37- அதிசய வார்த்தைகள் (பாலின்ட்ரோம்) !!!

னைவருக்கும் வணக்கம் . தினம்தோறும் நாம் ஒவ்வொருவரும் பல ஆயிரக் கணக்கான வார்த்தைகளை நம் இதழ்களில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம் . அதில் கோபத்துடன் பல வார்த்தைகள் , மகிழ்ச்சியுடன் பல வார்த்தைகள் , காதலில் பல வார்த்தைகள் , காமத்தில் பல வார்த்தைகள் என இப்படி அடுக்கிகொண்டேப்போகலாம் . எது எப்படி இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் பல வார்த்தைகளில் பல வினோதங்கள் மறைந்து இருக்கிறதுஅதை பற்றி ஆராயத் தொடங்கினால் இது போன்று இன்னும் எத்தனையோ ஆயிரம் பதிவுகளை அதற்காக செலவிட நேரிடலாம் !. சரி அப்படி என்றால் எதற்காக இந்த பதிவு என்ற உங்களின் வினாவிற்கான விடை இதோ தொடங்குகிறது .

நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் பல காரணங்களும் , கதைகளும் இருக்கின்றது . அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது பாலின்ட்ரோம் ( Palindrome ) .சரி இந்த பாலின்ட்ரோம் ( Palindrome ) என்றால் என்ன அர்த்தம் முதலில் அதைப் பாப்போம் . எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ ( Palindrome ) என்பதாம் .
மிழை விட ஆங்கிலத்தில்தான் இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம்கள் அதிகமாக பயன்படுத்தி பலர் உரையாடி இருக்கிறார்கள் . இதைவிட இதில் இன்னும் என்ன சிறப்பு என்றால் . தமிழில் நாம் இதுபோன்ற வார்த்தைகளை கண்டு பிடிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதரணமாக வேறு எந்த வார்த்தைகளின் கலப்புமின்றி இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை வைத்து கவிதையே எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!. இதோ அந்த கவிதையின் வரிகள் சில உங்களுக்காக But no repaid diaper on tub!  இந்த கவிதை உலகத்தில் அதிகமான ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ப்படிதான் ஒரு முறை பிரிட்டனில் கார் பந்தய வீரர் ஒருவரிடம் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து பேட்டி எடுக்க சென்றிருந்தார்கலாம் .அப்பொழுது அவரிடம் பல கேள்விகளை வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக வீசி இருக்கிறார்கள் நம் பத்திரிக்கையாளர்கள் . அதற்கு அவர் பதில் அளித்து முடிக்கும் வரை எந்த மாற்று வார்த்தைகளும் பயன் படுத்தாமல் அணைத்து பதில்களையும் பாலின்ட்ரோம் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் அளித்திருக்கிறார் . அதைப் பார்த்து அணைத்து பத்திரிக்கையாளர்களும் வியந்து போனார்களாம் .

தோ அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளும் , பதில்களும் .!

அந்த வீரரின் பெயர் ராட்காட் . இவர் பிரிட்டனில் பிறந்தவர் . இவரின் பிறப்பிலே ஒரு வினோதம்தான் . ஆம் இவரின் பிறந்த தேதியே 9 / 3 /39 - ( Palindrome ) பாலின்ட்ரோம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சரி இனி அவரிடம் கேட்டகப்பட்டக் கேள்விகளுக்கு வருவோம் .
ங்களுக்கு எந்த கார் பிடிக்கும் என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Race Car  என்று பதில் அளித்து இருக்கிறார் .  
டுத்தக் கேள்வி ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரணக் கார் வாங்க நேர்ந்தால் எந்த வகையானக் காரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்களாம் அதற்கு அவர் என்று ' A Toyota ' என்று பதில் அளித்து இருக்கிறார் . 
டுத்தக் கேள்வி நீங்கள் சினிமா பார்க்க விரும்பினால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்பிர்களா ?. இல்லை வீட்டில் இருந்து டீவியில் சினிமா பார்ப்பீர்களா ? .என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Same nice Cinemas என்று பதில் அளித்து இருக்கிறார்.

து மட்டும் இல்லை இது வரை எந்த மாநிலத்தின் மொழியின் பெயரில் இல்லாத சிறப்பு மலையாளத்திற்கு ( MALAYALAM ) இருக்கிறதாம் . எப்படிஎன்றால் ஆங்கிலத்தில் MALAYALAM  என்பதே ஒரு ( Palindrome ) பாலின்ட்ரோம் அடிப்படையில்தான் வைத்திருக்கிறார்கள். சந்தேகம் என்றால் வாசித்துப்பாருங்கள்.
மிழில் அதிகமானவர்களுக்கு தெரிந்த ஒரே பாலின்ட்ரோம் ( Palindrome ) வார்த்தை விகடகவி என்பதுதான் . நானும் முயற்சித்து சில வார்த்தைகளை தமிழில் இணைத்திருக்கிறேன் . இன்னும் இதுபோன்று பல வார்த்தைகளை உருவாக்கலாம் ஆனால் பல வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும் .

மிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள் !


ங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த ( PALIMDROME ) வார்த்தைகள் !


துபோன்ற உங்களுக்குத் தெரிந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை தெரியப்படுத்தலாம் . இன்னும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் .
 

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.31 மறுமொழிகள் to ! இன்று ஒரு தகவல் 37- அதிசய வார்த்தைகள் (பாலின்ட்ரோம்) !!! :