இன்று ஒரு தகவல் 39 - அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!!

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .

ரு காலத்தில் சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள் இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் . அதைப் பார்த்து வியந்துபோன ஒரு வழிப்போக்கன் அந்த நாட்டவரிடம் எதற்க்காக ஒவ்வொரு குதிரையையும் ஒரு கோணத்தில் வடிவமைத்து இருகிறிர்கள் என்றுக் கேட்க அதற்கு பதில் தந்த அந்த நாட்டவர் .

குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம் என்றும் !

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம் என்றும் !

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம் என்றும் பதில் அளித்தாராம் . இதற்குப் பெயர்தான் பேசும் சிலைகளோ என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கடந்து சென்றானாம் அந்த வழிபோக்கன் .

மிழில் ஒரு பல மொழி சொல்வார்கள் வாத்தியார் புள்ள மக்கு , போலிஷ் புள்ள திருடன் என்று அதுபோல் உலகத்தில் அனைவரையும் மிகவும் வியப்பில் ஆழ்த்திய உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை வடிவமைத்த வால்டிஸ்னி எலியைக் கண்டால் நடுங்கிவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . இவர்தான் இப்படியென்றால் இவரையும் மிஞ்சியவர் ஒருவர் இருந்தார் . இன்றும் அனைவர்க்கும் பெரும் சவாலாக விளங்கும் கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின் உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி கொண்டவராம் .

லகத்தில் இப்பொழுதெல்லாம் இயற்கையாக இறப்பவர்களைவிட செயற்கையாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் அதிலும் விபத்துகளினால்  கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது . இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில் ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் .

நாம் என்னதான் செம்மொழி தமிழ் மொழி என்று மாநாடும் போட்டு பேசினாலும் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி பதினான்காவது இடத்தில்தான் இருக்கிறதாம் .

ம் எல்லோருக்கும் பல பல்கலைக் கழகங்கள் பற்றி தெரியும் . ஆனால் எப்பொழுது தொடங்கப் பெற்றது என்றுக் கேட்டால் யாருக்கும் தெரியாது .அதிலும் உலகத்தில் பழமைவாய்ந்த பல்கலைக் கழகம் எது என்றுக் கேட்டால் அவளவுதான் . இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் உலகின் மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம் மொரோக்கோ நாட்டின் கருயின் நகரில் இருக்கிறது . இந்தப் பல்கலைக் கழகத்தை 859-லே தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ம் அனைவர்க்கும் குவைத் என்ற ஒரு நாட்டை நன்றாகத் தெரியும் . அங்கும் நமது இந்தியர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் . குவைத் என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களில் யாரிடமாவதுக் கேட்டால் பலருக்கு பதில் தெரியாது . இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள் குவைத் என்றால் அரபி மொழியில் சின்னக் கோட்டை என்று அர்த்தமாம் .

ன்ன நண்பர்களே இன்றையத் தகவல்கள் அனைத்தும் உங்களை மகிழ்வித்திருகும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

18 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 39 - அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!! :