இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!

னைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் தினம்தோறும் ஏதோ ஒரு முக்கிய வேலையாக பல இடங்களுக்கு செல்ல நேரிடலாம் அப்பொழுது நாம் எதற்காக செல்கிறோமோ அங்கு நாம் கடைபிடிக்கவேண்டிய சில விதிமுறைகள் பற்றி நமக்கு ஓரளவிற்காவது தெரிந்திருக்கவேண்டும் . அப்படி தெரியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் இன்னும் சில இடங்களில் அந்த துறையை சார்ந்தவர்களுக்கே அவர்கள் செய்யும் வேலை பற்றி முழுமையாக தெரிந்திருப்பதில்லை . இதைவிட மிகப்பெரியக் கொடுமை என்ன என்றால் படிப்பறிவற்ற சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சில அடிப்படை அறிவு கூட அதிகம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை இதுதான் உண்மை .


தை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் இப்படிதான் ஒருமுறை எனது நண்பர் கணினி வல்லுனர் ஒருவர் தனது குழந்தைக்கு போலியோ மருந்து கொடுக்க அழைத்து சென்றிருக்கிறார் . அங்கு வரிசையில் நிற்கும்பொழுது அழுகின்றக் குழந்தைகளை சமாதானம் செய்வதற்காக ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு சிலர் தாய் பாலும் பலர் புட்டிப் பாலும் கொடுத்திருக்கிறார்கள் . அப்பொழுது இவரின் குழந்தையும் அழுகத் தொடங்கவே இவரும் வேறு வழியின்றி அருகில் இருந்த டீ கடையொன்றில் பால்வாங்கி தனது குழந்தைக்கு கொடுத்து அதன் அழுகையை நிறுத்தியதாகவும் . ஒருவேளை அந்த டீ கடை மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் தனது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று அவர் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற அனுபவத்தை சொல்லிகொண்டிருந்தார் .அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் கொடுத்ததில் இருந்து எவளவு நேரம் கழித்து போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்கள் என்று . அதற்கு அவர் கொடுத்தப் பதில் எனது கோபத்தை அதிகப்படுத்தியது . பால் கொடுத்து ஐந்து நிமிடத்தில் சொட்டுமருந்து கொடுத்துவிட்டார்கள் உடனே வீடு திரும்பிவிட்டேன் என்று கூறினார் .

ண்பர்களே இதில் என்ன தவறு இருக்கிறது என்று பலருக்கு புரியாமல் இருக்கலாம் சொல்கிறேன் . எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும் , பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது . ஒருவேளை நாம் அவ்வாறு நாம் பால் கொடுக்க நேர்ந்தால் அரசு கொடுக்கும் போலியோ சொட்டு மருந்தின் சக்தியை முற்றிலும் தாய் பால் செயலிழக்க செய்துவிடும் . இதுவரை இந்த தகவல் தங்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அழைத்து செல்லும் எத்தனை பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை ?.

னைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் இடங்களில் இந்த தகவலை தெளிவுபடுத்தும் ஓவியங்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழிலும் எழுதி வைத்தால் நலமே ! செய்வார்களா இன்றைய மக்கள் ஆர்வலர்கள் !?????

டிஸ்கி :டித்த இந்த நண்பரே இப்படி இருக்கிறார் என்றால் . படிப்பறிவின்றி தங்களின் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்க வரும் மற்றவர்கள் எந்த அளவில் விழிப்புணர்வு அடைந்திருப்பார்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள் . இயன்றால் தங்களால் இயன்றவரை அனைவருக்கும் இதைப் பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் . வரும் புதிய தலைமுறையாவது  ஊன்றுகோல் இன்றி நடக்கட்டும் .! 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.50 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!! :