இன்று ஒரு தகவல் 47 - பழ மொழி வரலாறு

னைவருக்கும் வணக்கம் . என்னதான் அறிவியலின் வளர்ச்சியால் இன்று மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே சென்றாலும் இன்னும் அதி காலங்களில் பயன் படுத்திய சில விசயங்கள் மாறாமல்தான் இருக்கிறது . அதில்  பழமொழிகளும் ஒன்று.
  
சரி இந்த பழமொழி என்றால் என்ன இதுவரை இதற்கு நமது முன்னோர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன முதலில் அதைப் பாப்போம் பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.

 பொதுவாக . நம்மில் பலர் பேசும்பொழுது ஒவ்வொரு விசயத்திற்கும் ஏதேனும் ஒரு பழமொழியோ அல்லது உதாரண கருத்தையோ சொல்வதை நாம் பார்த்திருப்போம் . அந்த வகையில் எல்லோருக்கும் தெரிந்த பழமொழிகள் பல . அப்படி நாம் எல்லோரும் அறிந்த பல மொழிகளின் உண்மையான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை .
 சரி இன்று நாம் இன்று ஒரு தகவலின் வாயிலாக எல்லாப் பழமொழிகளின் உண்மையான விளக்கங்களை அறிந்துகொள்ள இயலாவிட்டாலும் இன்று அனைவரும் அறிந்த ஒரு பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவென்று அறிந்துகொள்வோம் .

ம் எல்லோருக்கும் ''ஆறிலும் சாவு , நூறிலும் சாவு '' என்ற ஒரு பழமொழி பற்றி நன்றாகத் தெரியும் . ஆனால் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் மற்றும் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது என்று கேட்க நேர்ந்தால் பலருக்கு இதற்கான பதில் தெரிந்திருக்க வாய்புகள் இல்லை . சரி இனி விசயத்திற்கு வருவோம் . நம் எல்லோருக்கும் இந்த ஆறிலும் சாவு ' , நூறிலும் சாவு ' என்ற பழமொழிக்கான விளக்கம் . சாவு என்பது ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியும் . ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையும் நிலையற்ற ஒன்று என்பதை குறிப்பதாக இந்த பழமொழி அமைந்தாலும் . இந்த பழமொழியின் உண்மையான பொருள் இதுவல்ல .

ரி அப்படி என்றால் இதன் உண்மையான பொருள் என்ன . சொல்கிறேன்
குருசேத்திர போரில் , சண்டை தொடங்குவதற்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்து கொண்ட குந்திதேவி , தனது மகனை காப்பாற்றும் எண்ணத்தில் . கர்ணனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைத்தார்களாம் . அப்போது தாயான குந்திதேவிக்கு பதிலளித்த கர்ணன் : ' அன்னையே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் . ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி இறந்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே சேர்ந்து போரிட்டு உயிரை விடுகிறேன் ' என்றான் கர்ணன் . இந்த நிகழ்வுதான் மேலே குறிப்பிட்டு இருக்கும் ' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்ற பழமொழிக்கு உண்மையான பொருளாம் .

ன்ன நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

33 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 47 - பழ மொழி வரலாறு :