அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

னைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதான் . அதில் ஆணும் , பெண்ணும் ஒன்றுபோல்தான் என்ற போதிலும் . வாழ்க்கை பயணத்தில் பெண்களின் வளர்ச்சியே மிகவும் வேகமானது . ஆண்மகனோ எதோ ஒன்றின் மீதான தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் தேங்கிப்போகிறான் . இதோ அந்த அவனுக்கும் அந்த அவளுக்கும் இடையில் உள்ள நீண்ட இடைவெளிகளை நிரப்பபோகும் வரிகள்.
 நான் அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்
அவளும் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்

னக்கு கல்லூரியில் B.E படிக்க இடம் கிடைத்தது
அவளுக்கும் கல்லூரியில் B.COM படிக்க இடம் கிடைத்தது

நான் B.E படித்து கொண்டிருந்தேன்
அவளுக்கு Ph.D. படிக்க இடம் கிடைத்தது .

நான் B.E முடித்திருந்தேன் .
அவளோ அப்பொழுது மருத்துவர் பட்டம் பெற்றிருந்தாள் .

வளுக்கு திருமணம் முடிந்தது .
நான் அப்பொழுதுதான் M.Tech நுழைவுத்தேர்வுக்கு  தயாராகிக்கொண்டிருந்தேன் .

வள் அம்மாவாகி அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது .
நான் அப்பொழுதுதான் M.Tech. படித்துக் கொண்டிருந்தேன் .

வளின் மகள் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
நான் அப்பொழுதுதான் எனது M.Tech. படிப்பை முடித்தேன் .

வளின் மகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள்
நான் அப்பொழுதுதான் வேலையில் சேர்ந்தேன் .

ப்பொழுது நான் எனது வருங்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு சிறந்த வேலையில் சேர்ந்து சிறப்பாக எனது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் .

திருமணம் செய்வதற்காக அவளைப்போலவே ஒரு நல்ல பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன் .

ன்று எனக்கு நிச்சயதார்த்தம் அவளின் மகள்தான் எனது மனைவி .

 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

26 மறுமொழிகள் to அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!! :