பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!!

யுதம்
எதுவும் தாக்கவில்லை
ஆனால் காயப்படுகிறேன்.
 வலியேதும்
உணர்ந்ததில்லை
ஆனால் விழிகளில் கண்ணீர்

குருதிகள்
எதுவும் வழியவில்லை
ஆனால் உணர்வுகள் கசிகிறது .

ல்லாம் இருந்தும் ஏதுமற்ற
வெறுமை எப்பொழுதும் .
எனது உதடுகள் பேசியதை விட
என் கைகள்தான் அதிகம் பேசும் .

வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே
இதுவரை நான் பேசிய
மிகப்பெரிய உரையாடல் .
அதையும் தனிமையில் மட்டுமே அரங்கேற்றி
மகிழ்கிறது இந்த உள்ளம் .

ல்லோரும் பேசும் நேரத்தில்
நான் மட்டும் நிசப்தத்தின்
எல்லைகளில் வழி மறந்தவனாய் .

ல்லோரும் என்னிடம்
ஏதேதோ சொல்லி
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நான் காது கேளாத ஊமை என்று !.



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

26 மறுமொழிகள் to பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!! :