அறிந்துகொள் அரிய தகவல்கள் ஆயிரம் - அதிசய மரம்


னைவருக்கும் வணக்கம் . முதலில் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் . எப்பொழுதும் இன்று ஒரு தகவல் என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றைப் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்வது வழக்கம் . அதற்கு மாறாக இன்று முதல் அரிய தகவல்கள் ஆயிரம் என்ற தலைப்பில் வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் பல அறிய குட்டி தகவல்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் . இன்றைய முதல் அரிய தகவல் ஆயிரத்தில் முதல் தகவலை தொடங்கி இருக்கிறேன் .

ரி இனி மேட்டருக்கு வருவோம் . நம் எல்லோருக்கும் மரங்களை தெரியும் !? என்னடா இவன் மரங்களை தெரியும் என்று எதோ ஒரு அதிசயத்தைப் பற்றி கேட்பதுபோல் கேட்கிறானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது . என்ன செய்வது . இப்படி ஒரு கேள்வியை கேட்கும் அளவிற்குதான் இன்று மரங்களை அழித்துக் கொண்டு இருக்கிறோம் . சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் அதைப் பற்றி பார்க்கத் தொடங்கினால் குட்டி தகவல் மெகா தகவலாக மாறிவிடும் . நம் எல்லோருக்கும் உலகிலேயே மிகப்பெரிய காடு எது என்று கேட்டால் தெரியும் . உலகிலேயே மிகவும் அழகான மரங்களைக் கொண்டு அழகாக காட்சிதரும் இடம் எது என்று கேட்டாலும் தெரியும் . ஆனால் உலகத்தில் அதிக எடையைக் கொண்ட மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது .

ரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? சொல்கிறேன் உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அது மட்டும் இல்லாது ஒரே நேரத்தில் இந்த மரத்தின் நிழலில் மனிதர்களாகிய நம்மை நிற்க வைத்தால் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் மேல் வெயில்படாமல் மாலை வரை அமர்ந்திருக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இறுதியான கணக்கெடுப்பின் படி அந்த மரத்தின் எடை சுமார் 2,800 டன் என்றும் ., அடிபாகச் சுற்றளவு 135 அடியாம் . அதன் உயரமோ 260 அடி என்றால் யூகித்துக்கொள்ளுங்கள் எவளவு பெரிய மரமாக இருக்குமென்று .!

ன்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . இனி வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த அரிய தகவல்கள் ஆயிரம் வெளிவரும் . ஆவலுடன் எதிர்பாருங்கள் .
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

28 மறுமொழிகள் to அறிந்துகொள் அரிய தகவல்கள் ஆயிரம் - அதிசய மரம் :