கவிதைகள் - புதிய மனிதன் ஒற்றை நாணயம்

னவுகள் சுமக்கும்
சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது
உடல் என்ற பெயரிட்டு

ற்றை மனிதனுக்கு
ஆயிரம் பெயர்கள் நேற்று .
பணத்தினால் ஒன்று
பதிவியினால் ஒன்று
பாசத்தினால் ஒன்று
கோபத்தினால் ஒன்று
சாதனையினால் ஒன்று
சாதியினால் ஒன்று
சண்டையினால் ஒன்று
நிறத்தினால் ஒன்று
குணத்தினால் ஒன்று என
ஒவ்வொருவரின் இதழ்களிலும்
உதட்டு சாயம் போல் ஒட்டி
ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன
சற்றுமுன்வரை....

த்தனையும் மாறிப்போனது
இறந்து போன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்...
பிணமென்று . .திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


28 மறுமொழிகள் to கவிதைகள் - புதிய மனிதன் ஒற்றை நாணயம் :