பனித்துளி சங்கர் கவிதைகள் - ரசித்திருக்கிறாயா !?

யிரம் கண்கள் நீ கொண்டாலும்
நீ கொண்ட பிறவி போதாது
அதன் ஒருபகுதியேனும் நீ ரசித்திருக்கிறாயா?

ன்னை சுற்றியே எத்தனையோ
மாற்றம் தினம் தினம் .....
ரசித்திருக்கிறாயா சிறிதேனும் !?

ப்பொழுதுதான் விரியும் மலர்கள் -அதில்
அவசரமாய் தேனெடுக்கும் தேனீக்கள்
அவற்றின் கால்களில் ஒட்டிய மகரந்த துகள்கள்
ரசித்திருக்கிறாயா !????

திகாலை இளஞ்சூரியன்
அதன் கதகதப்பை ரசித்திருக்கும்
அணில் குஞ்சுகள்

லகால் மெல்லத் தன்
இறகுகோதி பயில்நடை போடும்
குருவிக்கூட்டம் ,,
என்றாவது நின்று ரசித்திருக்கிறாயா !???????

ரங்களின் ஊடே வரும் மஞ்சள் வெய்யில்
மெல்லிளம் காற்றின் தாலாட்டில்
சுரங்கள் பாடும் இலைகளின்
இனிய சங்கீதம்

டைமழை நேரத்தில் வாழை இலைகளில்
பட்டுத்தெறிக்கும் மழை நீரின் மத்தளம்.....
ரசித்திருக்கிறாயா !????

த்தனை அழகாய் கறையான் புற்று
அளவெடுத்தாற்போல் சிலந்திவலை
அழகான தேன்கூடு ..
வரிசை தவறாது செல்லும் எறும்புக்கூட்டம்
ரசித்திருக்கிறாயா?

ழை நின்ற பின்னாலே
தென்னையின் கீழ் நின்று
அதன் மேலிருந்து விழும் ஒருதுளி நீரினை
அருகே வரும்வரை ரசித்து
கண்மூடி உன் முகத்தில் ஏந்தி இருக்கிறாயா?

ப்படி எத்தனையோ ..எத்தனையோ...
உன்னையும் என்னையும் சுற்றி
தினம் தினம் ஆயிரமாயிரம்
சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துகொண்டே
இருந்தாலும்

லகிலுள்ள ஜீவராசிகளுள் ரசிக்கத்தெரிந்த
ஒரே ஜீவராசி நீயாகிப் போனாலும்
ஏனோ உன்னை நீயே சிறைவைத்து
இயந்திரமாய் மாறி இல்லாத ஒன்றை தேடி
ஓடிக்கொண்டும் ஏங்கி கொண்டும்
உன்னை சுற்றி உள்ள இயற்கையை
சீரழித்தும் உனக்கு நீயே எமனாகிறாய்
இல்லை உன் சந்ததிக்கே எமனாகி விட்டாய் !!!!!!!!!!!!!!!ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.20 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் - ரசித்திருக்கிறாயா !? :