! பனித்துளிசங்கரின் கவிதைகள் - மௌன யுத்தம்


நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது.
சொல்ல நினைத்து
இறந்து போன வார்த்தைகளும் ,
பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும்
இன்னும் என் நினைவுகளில்
தேங்கிக் கிடக்கின்றன .
ன்னுடன் பேச முயற்சித்து பேசாமல்
சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம்
எதற்கென்றே தெரியாமல் இன்னும்
காத்துக் கிடக்கின்றன என் இதழோரம்

உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம்
இன்னும் தனிமைகள் மட்டுமே
நீள்கிறது முடிவுகளற்ற கானல் நீராய் .

உன் அருகில் இருந்தும்
தனிமையில் மட்டுமே
வார்த்தைகள் கரைக்கிறது இதழ்கள்.

உந்தன் கத்தி வீசும் பார்வைகள் மட்டும்
அவ்வப்பொழுது எந்தன் அருகில் வந்து
முழுதாய் என்னை குடித்து செல்கிறது .

நீ போலியாய் சிதறவிடும்
புன்னகைகளில் எல்லாம் வாடிப்போகிறது
எந்தன் நாட்கள்.

உந்தன் மௌனத்தின் மொழி
இத்தனை அழகா !!??
என்னை முழுவதும் கரைத்து
மீண்டும் எனக்கு மெல்ல
உயிர் தந்து ரசிக்கிறதே....

நீ கேட்கும் எதையும் என்னால்
கொடுக்காமல் இருக்க முடிந்ததில்லை
நீ என் உயிரோடு கலந்ததனால் ...
ஆனால் உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ???

மௌனசாட்டை வீசி
என்னை காயம்பட வைப்பதில் !?
உனக்கொரு மகிழ்ச்சியெனில்
எனக்கொன்றும் முரண்பாடுகளில்லை
உன் முடிவுகளில்....


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

23 மறுமொழிகள் to ! பனித்துளிசங்கரின் கவிதைகள் - மௌன யுத்தம் :