பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் - PART 2

னைத்து நண்பர்களுக்கும் வணக்கம் . எனது கடந்தப் பதிவில் இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் . அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . இந்த பிணங்கள் இங்கு எப்படி வந்தது 1 ? அதன் பின்பு இந்த பழமை வாய்ந்த மர்ம பிரமீடு எப்படிக் கட்டப்பட்டது !? ????? அதன் பின் அதற்குள் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள் என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் என்பதுடன் அடுத்தப் பதிவில் தொடரும் என்று அதிசயத்தின் அதிசயத் தகவல்களின் முதல் பகுதியை முடித்திருந்தேன்.


 சரி அப்படி பல மாதங்கள் பிணங்களை நீக்கும் அளவிற்கு என்னதான் நிகழ்ந்திருக்கும் அந்த இடத்தில் என்று எல்லோருக்கும் பல வியப்பான மர்மம் கேள்விகளாக ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றி இருக்கும். இதோ அந்த மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க போகும் விடையங்கள். இந்த மர்மத்தின் விடையம் ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது அவர்தான் நெப்போலியன் அவரும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு (4000) முன்பு எழுதப்பட்ட குறியீடுகளின் குறிப்புகளை வைத்தே இதை தெரிந்துகொண்டதாகவும் ஒரு முறை தனது குருவிடம் சொல்லி இருக்கிறார்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூபூ என்ற கிரேக்க மக்களுக்கும், தியோப்ஷ் என்ற அரசனுக்கும், சினிஸ்பூ என்ற அரசனுக்கும் ஏற்பட்ட பூசல் காரணமாக எப்பொழுதும் ஒருவரை ஒருவர் தங்களுக்கு தாங்களே அடித்துக்கொண்டு இறந்திருக்கிறார்கள் அப்படியும் தங்களின் கொலைவெறி தீராத அரசர்கள் இருவரும் வீட்டிற்கு இருவர் என்ற கணக்கில் பல லட்சம் மக்களை ஒரே இடத்தில் சங்கிலிகளால் பிணைத்து தினம் பல ஆயிரம் வீரர்களை விட்டு உயிருடன் ஒவ்வொருவராக சவப்பெட்டிகளுக்குள் அடைத்துக் கொன்றிருக்கிறார்கள் . சில நாட்களில் இறந்தவர்களின் பிணங்கள் அழுகிய நிலையில் அதிக வாடை ஏற்படவே . சங்கலியால் பிணைக்கப்பட்ட பல லட்சம் மக்களையும் விடுதலை செய்யாமல் அங்கிருந்து அனைவரும் ஓடிவிட்டார்களாம். ஆனால் அதில் ஜியா என்கிற மக்கள் மட்டும் எங்கும் செல்லாமல் . அங்கு இறந்த பிணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அகற்றி இந்த  GIZA என்கிற இடம் மக்கள் வாழும் இடமாக மாற்றி இருக்கிறார்கள் . அதன் பின் மலை அடிவாரத்திலேயே மக்களை குடியேற்றி வாழும் திட்டம் அமைத்து மக்களை குடியேற்றியுள்ளார்கள்.

ங்குதான் இன்று வரை உலக மக்கள் வியப்பாக பார்த்துவரும் GIZA  சியோப்ஸ் மன்னனின் பிரமிடு. ''கிஸா'' [GIZA] தென் கெய்ரோ மாவட்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது .மனிதன் இறந்தால் மீண்டும் சில காலம் கழித்து திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில், மரணத்தை நம்ப மறுத்தது மனித இனம். எகிப்திய அரசர்கள் பாரோக்கள் எனப்பட்டனர். இக்காலத்தில் சமாதியாகும் முன் தமக்கு சமாதி கல்லறை கட்டி பரலோகம் சென்று சுகமாக வாழ்வதற்குரிய வசதிகளை உள்ளடக்கிய பிரமிடுகளை ஒவ்வொரு பாரோவும் தன் ஆயுள் காலத்திலேயே நிர்மாணித்து விடுவது வழக்கம்.

றந்த மன்னனின் ஆவி சொர்க்கம் சென்று திரும்பி வரும்போது முன்பு குடியிருந்த தன் பழைய உடலிலேயே மறுபடியும் புகுந்துக்கொள்ளும். எனவே, அந்தகாலம் வரும் வரை இறந்த உடலைக் கெடாமல் பாதுகாப்பது அவசியம் என்று எகிப்தியர் நம்பினார்கள். எனவே இறந்த மன்னனின் உடலை, தைலமிட்டு, பதப்படுத்தி, பட்டு பீதாம்பரங்களால் வரிந்து சுற்றி, பிரமிடுகளின் அடியில் அமைந்துள்ள மண்டபங்களில் தங்கப்பேழையில் பாதுக்காத்து வந்தனர். இந்த நம்பிக்கையின் முடிவில் உருவம் பெற்றவைதான் மம்மிகள் .

துவரை நம் அனைவருக்கும் நாம் வாழும் இந்த நிலப்பரப்பில் இருக்கும் பிரமீடுகள் பற்றி மட்டுமே ஓரளவிற்குத் தெரிந்திருக்கும் ஆனால் செவ்வாய்க் கிரகத்தில் இன்று நாம் பூமியில் பார்க்கும் பிரமீடுகளை ஒத்த தோற்றம் கொண்ட பல மர்ம்ம அதிசயங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை

கிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு . அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.
இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக செவ்வாய்க் கோளில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் அமைப்புகள் ஒருநாகரிக முன்னேற்றமடைந்த சமூகத்தினால் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என்று சோதனை நடத்திவருகிறார்கள் .இன்றளவும் சோவியத் ஆராய்ச்சியாளர்கள் .

செவ்வாய்க் கோளில் காணப்படும் சிறிய பிரமிடுகள் எகிப்தில் கிஸா பகுதியில் உள்ள பெரியபிரமிடுகளையும்  பெர்முடா தீவுகளின் அடியில் உள்ள கடலுக்கு அடியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிடுகளையும், பிரேசில் நாட்டுக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிடுகளையும் ஆராந்து பார்த்ததில் இவை அனைத்தையும் ஒன்றுபோல் வடிவமைத்து இருக்கும் வியப்பு தெரிய வந்திருக்கிறது . இதில் மிகப்பெரிய மர்ம்மம் என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் இதுபோன்ற அதிசயங்கள் எப்படி சாத்தியம் என்ற மர்ம்மம் மட்டும் இன்னும் யாருக்கும் விளங்காத புதிராக தொடந்துகொண்டிருக்கிறது .

து மட்டும் இல்லாது இறதியாக கிடைத்த ஆராய்சிகளின் முடிவில் பூமியில் கட்டிடங்களின் நிழலைப்போல் மிகவும் தெளிவான நிழல் செவ்வாய்க் கிரக பிரமீடுகளில் காட்சி தந்திருக்கிறது . இந்த பூமியில் செவ்வாய்க்கோளில் உள்ளது போன்ற அவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடம் எதுவும் கிடையாது.என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

ரி நாம் எல்லோரும் மீண்டும் சியோப்ஸ் அரசரின் கல்லறைக்கு வருவோம் இந்த அரசரின் பிரமிடில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று பலருக்கு தோன்றலாம் சொல்கிறேன் . கிஸா பிரமிட் தொகுதியில் உள்ள சியோப்ஸ் எல்லாவற்றையும்விடப் பெரியது. கி. மு. 26 - ம்நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1953 - ல் அதை ஆராயத் தொடங்கிய பிரெஞ்சு விஞ்ஞானி அது ஒருசூரியக்கடிகாரம் என்பதைக் கண்டார். பிரமிட்டின் அளவும், உருவமும், நாள், மணி, பருவம் ஆகியவற்றைக்கணக்கிட உதவும் வகையில் அமைந்திருப்பது தெரியவந்தது. மையப்பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகள்துருவ நட்சத்திரத்தைக் காணும் வகையில் சரியாக 26 டிகிரி 17 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பிரமிட்கள் கல்லறையாக மட்டுமின்றி வானியல் ஆய்வுக் கூடமாகவும் பயன்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு மிக உயர்ந்த கட்டிடம் ஒன்றைக் கட்ட அதிகமாக பத்து ஆயிரம் பணியாளர்கள் முதல் இருபது ஆயிரம் பணியாளர்கள் வரை வேலை செய்திருப்பார்கள் ஆனால் இந்த பிரமிடு கட்டிய போது நாள் ஒன்றிற்கு இறந்த பணியாளர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து ஆயிரத்திற்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பிரமிட்டில் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு கல்லின் எடை 40 டன் எடை கொண்டதாம் .!

ப்படித்தான் ஒருமுறை இந்த பிரமீடுக்குள் இருக்கும் அறைகளை எண்ணி கணக்கு சொல்லும்படி ஐநூற்று ஐம்பது கணக்காளர்களை நியமித்தாராம் அரசர் சியோப்ஸ் . அப்பொழுது அவர்கள் அந்த பிரமீட்டிற்குள் செல்லும் முன்பு ஒருவேளை நீங்கள் இதற்குள் இருக்கும் அறைகளை சரியாக எண்ணி கணக்கு சொல்லாவிட்டால் அனைவரும் கொல்லப்படுவீர்கள் என்றும் கெடு விதித்து உள்ளே அனுப்பி வைத்தாராம் அதுமட்டும் அல்லாது அவர்களுடன் நான்கு மாதத்திற்கு தேவையான உணவுகளும் சேர்த்து அனுப்பப்பட்டதாம் ஒன்றும் புரியாத கணக்கர்கள் அரசனின் ஆணைக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பிரமீடிற்குள் சென்றவர்கள் எட்டு மாதங்கள் கழித்து


டந்தது என்ன  !!!!!!!!?????  தொடரும்


 றக்காமல் உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

34 மறுமொழிகள் to பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் - PART 2 :