! கவிதைகள் நிலா !

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே !
நிலா
காரிருள் மரத்தில் கனியாய் நிலா...
கலங்கிய கடலிலும் கலந்தது நிலா....

குதித்தோடும் ஆற்றிலும் குளித்தோடும் நிலா.....
காதலர்களின் கற்பனையில் கவிதையாய் நிலா...

ந்த ஊனக்கவிதையில் கூட உவமையாய் நிலா..
என் காலத் தெருவில்மட்டும் கானல்நீராய் நிலா..

ல்லா நிலைநீரிலும் நீந்துகின்ற நிலா...
என் நட்பு ஓடையில் நீரிருந்தும் நீ இல்லை.. நிலா....

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

21 மறுமொழிகள் to ! கவிதைகள் நிலா ! :