மந்திரப் புன்னகை கவிதைகள்


ண்ணங்களில் வண்ணங்கள்
பூசி செல்கிறது உந்தன்
இதழோரப் புன்னகை

 சில யதார்த்தங்கள் வழிந்து விழுந்திடும்
வியர்வைத் துளிகளாய்
கழிந்து போகிறது கால ஓட்டத்தில்

றக்க முயற்சித்து தோற்றுப்போன
எண்ணங்களின் தொகுப்புகளில்
இன்னும் குறையாத அணிவகுப்பாய்
மனக்கிடங்கில் சத்தமிடுகின்றன
உன் நினைவுகள் .

ணிகள் எதுவுமின்றியே
அறையப்படுகிறது எனது
எதிர்பார்ப்புகள் அனைத்தும்
உன் வருகை என்னும் சிலுவைகளில் .

யிரிழந்த தேகமாய் தினமும்
உனது உறவை தேடி தேடித்
தொலைந்துபோகிறேன் கனவுகளுக்குள்

நீ அருகில் இருக்கும்பொழுது
நொடிகளாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
இன்று தீர மறுத்து வருடங்களாய் வதம் செய்கிறது .
தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள் .

டையப் போகும் நீர் குமிழியாய்
ஒவ்வொரு நொடியும்
துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்
விரைவில் வந்து தந்துவிடு சுவாசம்
உயிர் நின்றுபோவதற்குள் ,!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

23 மறுமொழிகள் to மந்திரப் புன்னகை கவிதைகள் :