பனித்துளி சங்கரின் கவிதை - நினைவு தேசம்


 எத்தனை உலக அதிசயங்கள்
 உன்னை மட்டுமே சுற்றி சுற்றி
மகிழ்ச்சி கொண்டேன்

த்தனை இயற்கை அதிசயங்கள்
உன் அன்பான வார்த்தைகளில்
 மட்டுமே தெரிந்துகொண்டேன் .

த்தனை விபத்துக்கள்
பூகம்பம்கூட செய்யாத மாற்றத்தை
உனது இதழோர
புன்னகையில்தான் உணர்ந்துகொண்டேன் .

றந்து போவது
உடல்கள் மட்டும் இல்லை
உணர்வுகளும்தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்றுத்தந்தது .

ன் மடியில் தலை சாய்த்து
உறங்கிப்போன நிமிடங்களை எல்லாம்
 மீண்டும் புதிப்பிக்க
முயற்சித்து தோற்றுப்போகிறேன் .

றந்து போவேனோ
என்பதற்காக சுவாசிக்கவில்லை
ஒரு வேளை
உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .!
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


30 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதை - நினைவு தேசம் :