அரிய வியப்பானத் தகவல்கள் : தீப்பெட்டி தோன்றிய வரலாறு !

னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் புதிய செய்தியுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னதான் அறிவியலின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும் இன்னும் இந்த உலகம் அனைத்தையும் அச்சுறுத்தும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஐம்பூதங்கள் (பஞ்சபூதங்கள்) இந்த ஐம்பூதங்கள் பற்றி அனைவரும் நன்கு அறிந்ததே என்றாலும் மீண்டும் ஒரு முறை தெரிந்துகொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் இவ்வைந்தும் இவ்வுலகத்தில் இயற்கையின் அன்பான ஆயுதங்கள். சில சமயங்களில் இயற்கை சீற்றங்களால் நாம் சீண்டப்பட்டும், நம் செயற்கைகளினால் அவை சீண்டப்பட்டும் நமக்கு நாமே காயத்தை ஏற்படுத்திக் கொள்வது வாடிக்கையாகிப்போனது.

ரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த ஐம்பூதங்களில் நாம் பார்க்க இருப்பது நெருப்பு பற்றிதான். கற்காலத்தில் மனிதன் கண்டு பிடித்த ஒரு அரிய பொக்கிஷம் இதனால்தான் இன்றும் நாம் சுவையான உணவுகளை சமைத்து உண்டு கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட இந்த நெருப்பையும் ஒரு பெட்டிக்குள் அடைத்து உலகிற்கு அறிமுகம் செய்தார் ஒருத்தர் என்றால் நம்புவீர்களா !? ஆம் நண்பர்களே..! நாம் இன்றைய தகவலின் வாயிலாக தீப்பெட்டி என்ற ஒன்று எப்படி தோற்றம் பெற்றது என்பது பற்றிதான் இன்று அறிந்துகொள்ளப் போகிறோம் சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் .

ந்த நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர். இங்கு சிலருக்கு ஜான்வாக்கர் என்று சொன்னதும் மற்றொன்றும் ஞாபகத்திற்கு வந்திருக்கும் இது உச்சரிப்பில் ஒரு மதுபானத்தின் பெயரும் உண்டு. சரி அது இப்ப நமக்கு வேண்டாம் அதைப் பற்றி சொன்னால் அப்பறம் ஒரு சிலர் போதையில் மறுமொழி எழுதாமலும், ஒட்டுப்போடாமலும் போயிட்டேன் என்று காரணம் சொன்னாலும் சொல்லுவிங்க..!! (ஹி...ஹி..ஹி.. ச்சும்மா தமாசுக்கு)

ஆகவே இப்ப நாம் இந்த தீப்பெட்டியை மட்டும் பற்றி அறிந்துகொள்ளலாம். (ங்கொய்யால அப்பத்தல இருந்து இதையேதான் சொல்லுற உடனே விஷயத்திற்கு வாலேனு சொல்லுறது நல்லா கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்) ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார் அப்பொழுது சில குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்து பூசினார் அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டி அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதில் இருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்து பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் உன்று வைத்திருக்கிறார் அப்பொழுது அதன் வழியாக சென்ற அனைத்து விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீ பிடித்துக்கொண்டதாம். அப்பொழுது தொடங்கிய இந்த குச்சி முறைதான் இன்று தீப்பெட்டி என்ற பெயரில் உலகமெங்கும் பெட்டிகளில் அடைத்து கையாளப்படுகிறது.

தில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீ பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார் இந்த கண்டுபிடிப்பும் அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது காரணம் இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீ பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்கு காரணம், அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசை தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான் என்பவரையும், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர் அதன் பிறகுதான் பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது.
 
ன்ன நண்பர்களே..! இன்றைய தீப்பெட்டி பற்றிய தகவல் உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு வியப்பான அரியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 
 
 

30 மறுமொழிகள் to அரிய வியப்பானத் தகவல்கள் : தீப்பெட்டி தோன்றிய வரலாறு ! :