பனித்துளி சங்கரின் கவிதைகள் : நிசப்த இரவுகள் - Panithuli shankar kavithaigal in Tamil


ழுது அழுது நனைந்த கன்னங்கள்
உலர்த்தி வைத்த விழியோரங்கள்
ஒட்டி வைத்த புன்னகையென போலியாய்
தினம் தினம் நீள்கிறது இரவுகள்
தழ் சொல்லாத பிரியங்கள்
உன் விழிகளில் கசிகிறது கண்ணீராய்...
விம்மி விம்மி நிசப்தம் கிழிக்கும்
சிறு அழுகை சத்தம் என்னை
முழுவதுமாய் சிறை பிடிக்கிறது .

ன்னவென்று கேட்க எத்தனித்தும்
இயலாத உள்ளமாய்
பக்கத்து அறையில்  
பாதி உணர்வு குடித்த
அவளின் சத்தத்தின்
மிச்சத்தில் இறந்து கொண்டிருக்கிறேன் .

ருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!

முற்று பெறாத சுவாசமாய்
என் மனம் எங்கோ
வெகுதொலைவில் மெல்ல மெல்லத்
தொலைந்துபோய்க் கொண்டிருக்கிறது
அந்த பாதி வெளிச்சம்
அனைத்து இரவில் !

வெளிச்சத்தில் தொலைத்த
பொருளாய் என் இதயம்
உன்னிடம்

ரவுக்குள் தொலைந்த
வெளிச்சமாய் இங்கு
இன்னும் தனிமையில்
நான் . ..
 

நேசத்துடன் 
பனித்துளி சங்கர் 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.  

27 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : நிசப்த இரவுகள் - Panithuli shankar kavithaigal in Tamil :