பனித்துளி சங்கரின் கவிதைகள் : காதல் அரங்கேற்றம்


நீண்டதொரு வழிப்பாதை
இருந்தும் வழி மறந்த விழிகளுடன்
குழந்தையென தவழ்கிறது உள்ளம்
உன் காலடித் தடம் தேடியே..!  
குபுக்கென்று பீறிட்டு வெளிவரும்
கண்ணீர்த் துளிகளிலெல்லாம் இன்னும்
மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின்
காதல் முகவரி மெல்லக் கசிந்து
எனது உள்ளம் நிரப்பி செல்கிறது .

ழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலாய் உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கிறது உனக்கானப் பிரியங்கள்
என் இதயமெங்கும் .

னக்கானக் கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மவுனத்தில் இடருகிறாய் !?


னக்குத் தானே பேசிகொள்வதில்தான்
எத்தனை ஆனந்தம்
முதல் முறை இதையும்
உனக்கான நினைவேட்டில் நிரப்பிக் கொள்கிறேன்

 நீயும் நானும்
உரையாடிக் கரைந்த தருணங்களில்
தடை பட்டு தொலைந்து போன
வார்த்தைகளின் மிச்சங்களிலெல்லாம் புதிதாய்
சில சொற்தொடர்
உயிர் பெற்று மீண்டும்
சுவாசிக்கத் தொடங்கிவிட்டது
நம் இருவருக்கும் இடையேயான காதலென.......
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

31 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : காதல் அரங்கேற்றம் :