இன்று ஒரு தகவல் : மகாகவி பாரதி பேசிய இறுதி உரைனைத்து நண்பர்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு சிறப்பானத் தகவலுடன் இன்று சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது வரை நாம் இன்று ஒரு தகவல் என்ற தொடரில் பல துறைகளிலும் உள்ள பல அரிய அதிசயத் தகவல்கள் பற்றி அறிந்துகொண்டோம். அதுபோல் பல உயர்ந்த மனிதர்களின் சிறப்புகள் பற்றியும் பல பதிவுகளின் வாயிலாக அறிந்துகொண்டோம். அந்த வகையில் இன்று நாம் அறிந்துகொள்ள இருக்கும் தகவல் .

 இன்று நாம் அனைவரும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு தனது எழுச்சிமிகு கவிதைகளின் வாயிலாக ஒவ்வொரு  உள்ளங்களிலும் விடுதலை தீ மூட்டி சுதந்திரம் ஒன்றே தனது உயிர் மூச்சு என்று தமிழுக்காகவும் , தமிழர்களுக்காகவும் தனது கவிதைகளின் வாயிலாக சமதர்மம் போதித்த முதல் கவிஞன் . தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.உலகத்தில் இல்லை என்ற சொல்லே இல்லையென்று செய்வேன் என்று மேடைகளில் முழங்கிய முதல்வன்.

  "கவிதை எழுதுபவன்  கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி."
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

 முறுக்கு மீசை மிரட்டும் தேகம் விரட்டும் முண்டாசு என வெள்ளையர்கள் அனைவருக்கும் காட்சி பயத்தை இதயங்களில் பதிய செய்த பெருமைக்குரியவர். இன்றும் அனைவரின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எழுச்சி பெற்று விளங்கும் முண்டாசு கட்டிய பாரதியார் பற்றிய ஒரு தகவல் தான் இன்றையப் பதிவு ..

ரி பொதுவாக நம் எல்லோருக்கும் பாரதியாரைப் பற்றி நான்றாகத் தெரியும் . அப்படி என்ன இந்தப் பதிவில் சிறப்பு இருக்கிறது என்று பலருக்கு வினாக்கள் எழலாம் சொல்கிறேன். பொதுவாக யாரேனும் ஒருவரிடம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு தேசத் தலைவர் பற்றியோ அல்லது ஒரு சாதனையாளர் பற்றியோ அவர் எப்பொழுது பிறந்தார். அவர் மறைந்த தேதி அல்லது அவர் இறுதியாக வாழ்ந்த இடத்தின் பெயர் என இப்படி ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்டால் அனைவருக்கும் பதில் தருவது எளிதான ஒன்றுதான் ஆனால் ஏதேனும் ஒரு தலைவர் அல்லது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான மனிதர் இறுதியாக எங்கு எப்பொழுது பேசினார் என்று யாரிடமாவதுக் கேட்டால் இதற்கு நம்மில் பலருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அந்த வகையில் எழிச்சி மிகு கவிதைகளாலும் தீ பறக்கும் பேச்சுக்களாலும் விடுதலை தீ மூட்டிய தேசியக் கவிஞன் பாரதியார் எங்கு எப்பொழுது இறுதியாக பேசினார் என்று உங்களுக்குத் தெரியுமா !?(அதான் தெரியலனு தெரியுதுல... சொல்லி தொலையேன் மக்கா..!!!!)

தோ தெரிந்துகொள்ளுங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு அனைவரையும் ஒன்று திரட்டி போராடத் துடித்த பாரதி 1921 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறை ஈரோட்டிற்கு வருகை தந்திருக்கிறார். ஈரோட்டிற்கு வந்தப் பாரதி கருங்கல்பாளையம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் '' மனிதனுக்கு மரணமில்லை '' என்றத் தலைப்பில் பொங்குகின்றக் கவிதைகளிலும் கொப்பளிக்கின்ற வார்த்தைகளிலும் எழுச்சி மிகு உரையாற்றிய மகாகவிப் பாரதி அதன் பிறகு சென்னை சென்ற அவர் 1921 ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி (11 ) மரணம் அடைந்தார் . இதன் பிறகு மகாகவிப் பாரதி தனது வீட்டைத் தவிர வேறு எங்கும் சென்று உரையாற்றவில்லை என்பதும் , அவர் கருங்கல்பாளையத்தில் ஆற்றிய எழிச்சி மிகு உரையே இறுதியானது என்றும் குறிப்பிடத் தக்க ஒன்று .

 து மட்டும் இல்லாது பாரதி இறுதியாக ஈரோட்டில் ஆற்றிய உரையே இறுதியாக அமைந்ததால் அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்திற்கு ''மகாகவி பாரதியார் நூலகம்'' என்று அவரின் நினைவாக பெயரிடப்பட்டு இன்றளவும் சிறப்பாக திகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . மீண்டுமொரு அறியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் .
  
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


51 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் : மகாகவி பாரதி பேசிய இறுதி உரை :