! சிகரெட்டின் சீக்ரெட் கவிதைகள் : பனித்துளி சங்கர் (Cigarete kavithaigal )


தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு..!
நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ..!.
உன்னை சுவாசித்த நானோ...
னம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்.
புற்று நோய் முற்றிப்போனதாம்,
மருத்துவர் சொன்னார்..!

றிவுரை சொல்லும் பொழுது சிரித்த இதழ்கள்
இன்று ஆராய்ந்து சொன்ன பொழுது அழுகிறது
புகைத்தலின் உச்சம்தான் இறத்தலோ.. !?
முதல் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!

மெல்ல உயிர் குடிக்கிறது.
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உள்ளுக்குள்
புற்றுநோய் (கேன்சர்) என்ற பெயரில்..!!
 
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் . நண்பர்களே உங்களுக்கான கிறிஸ்மஸ் பரிசு மற்றும் மடல் இங்கே இணைக்கப்பட்டுள்ளதுந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 
 

26 மறுமொழிகள் to ! சிகரெட்டின் சீக்ரெட் கவிதைகள் : பனித்துளி சங்கர் (Cigarete kavithaigal ) :