குடியரசு தந்த சுதந்திர வறுமை : பனித்துளி சங்கர் கவிதைகள் ஜனவரி 26

யரத்தில் பறக்க கொடி தைக்கும் எனக்கு
உடலில் உடுத்த ஒரு உடை இல்லை .
குடியரசு தினம் கொண்டாடும் நம்மில் பலருக்கு
குடியிருக்க வீடில்லை !.
வீடுள்ள நம்மில் பலர் ஏனோ இந்தியாவில் இல்லை
ஆண்டுக்கு ஒரு முறை அழகான அணிவகுப்பு
ஆடையில் குத்திக்கொள்ள அழகழகான கொடிகள்
நல்ல வியாபாரம் நாட்டில் !

கொடியேற்ற வருபவனுக்கோ கோட்டையில் இடம் இருக்கு
ஆனால் இந்தக் கொடியை தைக்கும் எனக்கோ
குடிசையில் கூட இடமில்லை !.

றந்தவனும் ,இருப்பவனும்
என் நாட்டில் இருப்பதையெல்லாம் சுருட்டிகொண்டான்
இன்னும் எஞ்சி இருப்பது இந்த ஒட்டுப்போட்ட கொடியும்
இன்னும் ஓட்டுப் போட்டு ஒட்ட இயலாத
கிழிந்து போன இதயமும்தான் !

டுப்பில் கட்டி இருக்கும்
கோவணமும் பறிக்கப்படுமுன்
பாடையில் படுத்துவிட்டால்
சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை !......
* * * * * * *
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * * *

33 மறுமொழிகள் to குடியரசு தந்த சுதந்திர வறுமை : பனித்துளி சங்கர் கவிதைகள் ஜனவரி 26 :