பனித்துளி சங்கரின் கவிதைகள் : கண்ணீர் இரவுகள் ! ( Love Poem )ழிந்து போகும் இளமையென சிறியமுள்..!
துரத்திப் பிடிக்கும் முதுமையென பெரியமுள்..!
ஒரு கடிகாரமாய் வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறது வாழ்க்கை..!!

காலத்தின் வேகத்தில்
புதுப்பிக்க முயற்சித்து
தோற்றுப் போகிறது இளமை..!

உறக்கத்தில் உயிர் பெரும் கனவுகளாய்
ஆயிரம் ஆசைகள்,
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
உறங்கிக் கிடக்கும் உணர்வுகளுடன்...

தூக்கி எரியும் குப்பையென சில நாட்கள்,
துரத்திப் பிடிக்கும் பட்டமென சில நாட்கள்
நிரந்தரமின்றி நகர்கிறது வாழ்க்கை....!!!

சாயம் பூசிய புன்னகைகளிலும்
சாட்டை வீசும் வார்த்தைகளிலும்
காட்சிப் பிழையென அவ்வப்பொழுது
எட்டிப் பார்க்கிறது கண்ணீர் துளி...!

களைந்து போகாத ஆடை,
குறைந்து போகாத புன்னகை,
அவிழ்ந்து போகாத மவுனம் - என
மீண்டும் ஒரு இரவிற்குள்
சத்தமின்றி கசியத் தொடங்கிவிட்டது
இவளின் கண்ணீர்த் துளிகள்...!!
 
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் . 
36 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : கண்ணீர் இரவுகள் ! ( Love Poem ) :