காதல் வந்தால் - காதல் கவிதை Panithuli shankar love poem 05 +01+2011
ந்தக் காதல் வந்தால்
 உறக்கம் பறிபோகும்.,
உணவு மருந்தாகும்
கண்ணாடி காதலனவான் ,
 பனித்துளி சுடும்
வெயில் குளிரும்
கடிகாரம் எதிரியாய்த் தோன்றும் .
கண்களை திறந்துகொண்டே கனவுகளில் மிதப்பாய்
காகிதத்தில் அவனின் நினைவுகள் கவிதைகளால் நிரப்பப்படும்
அவனுக்கான காத்திருப்பின் தருணத்தில்
கைகளில் கிடைக்கும் அனைத்தும் காயம்படும் .
பிறர் கேட்கும் கேள்விகளுக்கு மவுனத்தால் மட்டுமே பதில்கள் உதிர்ப்பாய்
 சர்க்கரை கசக்கும்,
எங்கோ துரத்தல் மெல்லக் கேட்கும்
அவனது குரல் மட்டும் உனக்கு இனிக்கும் .
ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் .
அவன் உன் அருகில் இருக்கும் அந்த நொடி
 இறந்துபோகத் நினைப்பாய் !
அவன் அருகில் இல்லாத மறு நொடி உலகையே வெறுப்பாய்
 இதுதான் காதல் !ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.28 மறுமொழிகள் to காதல் வந்தால் - காதல் கவிதை Panithuli shankar love poem 05 +01+2011 :