தேகப் பிழை : கவிதைகள் : Love feeling kavithai in tamil + புதன் (23+02+2011)

பார்வை இல்லாத இரவுகளின் நிசப்தத்தில்
தேகங்கள் உரசும் சத்தம் நடு நிசி எங்கும்...
மெல்ல அணைந்துபோனது வெளிச்சம்
அவன் என்னை அணைத்துக்கொள்கையில்...
முடியாது என்பதும் சில நொடிகள்தானோ..!?
முரட்டுக் கரங்களின் தீண்டலில்
முற்றுபுள்ளி எட்டியது அதுவும்...!
அவனின் மோகம் தந்த தாகத்தில்
ஆடைகள் எல்லாம் அனுமதியின்றி
எடுத்துக்கொண்டது விடுமுறை..!
காமம் தீண்டிய மறு நொடி
கறைபட்டுப் போனது  காதல் !..

அவனின் ஞாபகங்களின் சுமைதாங்கி
ஒவ்வொரு நொடியும்
அவனுக்காய் இறக்கத் தொடங்கிவிட்டேன்...!
இனி உன்னைக் காதல் செய்வது
இறந்து போவதிலும் புதிதே..!!


24 மறுமொழிகள் to தேகப் பிழை : கவிதைகள் : Love feeling kavithai in tamil + புதன் (23+02+2011) :