பனி விழும் தேகம் : PANITHULI SHANKAR காதல் கவிதைகள் 10.+02+2011


ரு உடல்களுக்கு இடைப்பட்ட தூரத்தை
 பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.!
முத்தம் இட்டு
இடைவெளி தந்த தருணத்தில்
 சத்தமின்றி இளைப்பாறத் தொடங்கிவிட்டது இதழ்கள் .
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
* * * * * *

24 மறுமொழிகள் to பனி விழும் தேகம் : PANITHULI SHANKAR காதல் கவிதைகள் 10.+02+2011 :