அமீரக குறும்படம் சித்தம் அறிமுகம் : SITHAM (Short Film)


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம் உங்கள் அனைவரையும் இந்த அறிமுக குறும்படம் என்ற பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அவசரமான உலகத்தில் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பல ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் இதயம் என்னும் சிறு குடுவைக்குள் நிரப்பி, அதை எப்படியும் தன்வசப் படுத்திக்கொள்ள தினமும் பல புதிய எண்ணங்களை சிந்தைகளில் விதைத்து அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். என்னதான் தினமும் மனிதர்களாகிய நாம் நிற்காமல், சுழலும் இயந்திரமாக உழைத்தாலும் நமது இதயங்களையும் புதுப்பிக்கும் அதிசயமாக நம்முடன் பொழுதுபோக்கு என்ற ஒரு பொக்கிஷமும் வளர்ந்து வருகிறது.

ம்மில் பலருக்கு விளையாடப் பிடிக்கும் இன்னும் சிலருக்கு வாசிக்க பிடிக்கும் இன்னும் சிலருக்கு எழுதுவது பொழுது போக்காக இருக்கலாம். ஆனால் இறுதியாக எடுக்கப் பட்டக் கருத்துக்களின் படி உலகத்தில் அதிகமானவர்கள் தங்களின் நேரத்தை செலவிடுவதற்கு பயன்படுத்தும் ஒரே பொழுது போக்கு சினிமா என்று உறுதி செய்திருக்கிறார்கள். இன்று நாம் பார்க்க இருப்பதும் ஒரு குட்டி சினிமா பற்றிதான். அது என்ன குட்டி சினிமா (short movie)...!?

வாய்ப்புகளை தேடி செல்லாமல் தாங்களே தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சாதனை உலகம்தான் இந்த குறும்பட சினிமா என்று சொல்லவேண்டும். எண்ணங்களையும் ஏக்கங்களையும் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தங்களின் சிந்தைகளில் பூக்கும் பூக்களை மக்களாகிய நம்மீது அள்ளி வீசுவதில் இன்றைய நிலையில் இத்தகைய குறும்படங்கள் முதன்மை வகிக்கிறது என்று சொல்லலாம். பல கோடிகள் செலவு செய்து பல மணி நேரங்களை கரைத்து புரிய வைக்க இயலாத பல உணர்வுகளை சில நிமிடங்களில் சிறப்பாக சிந்தையில் தைக்க செய்கிறது இந்தக் குறும்படங்களின் தொகுப்புகள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமீரகத்திலிருந்து ஒரு புதிய லாரன்ஸ் என்ற நட்பின் உறவொன்று அழைப்பிதழில் வந்தது பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் சந்திக்கத் தூண்டிய ஒரு அழகிய தருணம் என்ற என்னை உணர வைத்தது அவரின் உரையாடல். அறிமுகத்தில் துவங்கிய எங்களின் உரையாடல் மெல்ல சினிமா என்ற ஒரு கலை உலகத்திற்குள் மெல்ல நடைபோடத் துவங்கியது. அப்பொழுது நாங்கள் ஒரு குறும்படம் short movie தயாரித்து இருக்கிறோம். ”சித்தம்” என்ற பெயரில் என்று அவர் சொன்னபொழுது முதலில் ”சித்தமா அப்படியென்றால் என்ன ??” என்ற ஒரு கேள்வி மெல்ல எழுந்தது. எங்களின் உரையாடல் இடைவெளியொன்றில் குறும்படம் என்றாலே ஒரு இனம் புரியாத மோகம் எனக்கு. அதிலும் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இயக்கி இருக்கிறார் என்று சொல்லும்பொழுது பார்க்காமல் இருக்க இயலுமா..!? எனது ஆர்வத்திற்கு சில தினங்கள் தடை போட்டு வைத்தது நண்பரின் பதில் தற்போதுதான் இணையத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. நாளை தருகிறேன் நண்பரே என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னது போலவே மறுநாள் சித்தம் என்ற குறும்படத்தில் ஒரு அழகிய அறிமுகத்துடன் இணைப்பு மடலில் வந்திருந்தது. இது வரை நான் குறும்படங்களில் ஒரே பகுதியில் கதை அனைத்தையும் சுருக்கி முடித்து இருப்பதைத்தான் பார்த்து இருக்கிறேன். ஆனால் முதல் முறையாக இரண்டு பகுதிகளாக ஒரு குறும்படம் பார்த்த அனுபவத்தின் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.
 
 ஆம் நண்பர்களே..! சினிமா துறை சார்ந்த எந்த அனுபவமும் இல்லாத ஒரு நபர் தனது கையில் கிடைத்த ஒரு கேமராவை வைத்து இந்த சமுதாயத்திற்கு என்போன்றவர்களாலும் சில சிந்திக்க வைக்கும் குட்டி சினிமா ஒன்றை தர இயலும் என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை அவரின் வார்த்தைகளிலும் அந்த குறும்படத்தை பார்த்த பொழுதும்தான் உணர்ந்துகொண்டேன். மொத்தத்தில் இந்த நண்பர் தயாரித்திருக்கும் ”சித்தம்” என்ற குறும்படம் விழிப்புணர்வின் உச்சம் எனலாம். நண்பர்களே..! நீங்களும் இந்தக் குறும்படத்தை பார்த்துவிட்டு


சித்தம் குறும்படத்தின் PART -1

சித்தம் குறும்படத்தின் PART -2
 
ங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். உங்களின் கருத்துக்கள் மட்டும்தான் மீண்டும் ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று முழுமையாக நம்புகிறோம்.
 
 

22 மறுமொழிகள் to அமீரக குறும்படம் சித்தம் அறிமுகம் : SITHAM (Short Film) :